செய்திகள்

ஈராக்கில் கார் குண்டு வெடிப்பு: 11 பேர் பலி

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் நடந்த கார் குண்டு வெடிப்பில் 11 பேர் பலியாகிவிட்டதாக தெரியவந்துள்ளது.

நேற்று ரம்ஜான் நோன்பை முடித்துக்கொண்டிருந்த போது இந்த குண்டு வெடிப்புகள் நடைபெற்றன. பாக்தாத்தின் தென்மேற்கு பகுதியில் நடந்த தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டார்கள். 27 பேர் படுகாயம் அடைந்தனர்.
மற்றொரு சம்பவத்தில் வெடிக்குண்டுகள் நிரப்பபட்ட கார் ஒன்று பஸ் மீது மோதியதில் 3 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல்களுக்கு இதுவரை யாறும் பொருப்பேர்க்கவில்லை. ஆனால் ஐ.எஸ். தீவிரவாதிகள் தான் தாக்குதல் நடத்தியிருக்க வேண்டும் என கூறப்படுகிறது.