செய்திகள்

ஈராக்கில் ராணுவ வெடிப்பொருள் கிடங்கின் மீது கார் குண்டு தாக்குதல் – 38 பேர் பலி

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் இருந்து மேற்கே சுமார் 50 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள அல்-முத்தனா நகரில் இருக்கும் ராணுவ முகாமின் மீது இன்று வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட காரை மோதவைத்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 38 பேர் பலியாகினர்.

சக்தி வாய்ந்த இந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் அந்த ராணுவ முகாமுக்குள் இருந்த வெடிப்பொருள் கிடங்கு முழுவதும் நாசமடைந்தாகவும், அருகாமையில் உள்ள போலீஸ் குடியிருப்பில் வசித்துவரும் 25-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்ததாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை. படுகாயங்களுடன் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றுவரும் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகின்றது.