செய்திகள்

ஈரானிற்கு அதிநவீன ஏவுகணைகளை வழங்குகின்றது ரஷ்யா

ஈரானிற்கு அதிநவீன வான்பாதுகாப்பு ஏவுகணைகளை வழங்குவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை ரஷ்யா நீக்கியுள்ளது.
2010இல் ஈரானின் அணுவாயுததிட்டம் காரணமாக ஐக்கிய நாடுகள் விதித்த தடையை தொடர்ந்து ரஷ்யா எஸ்-300 ஏவுகணைகளை வழங்குவதற்கு தடைவிதித்திருந்தது.
எனினும் கடந்த வாரம் ஈரானிற்கும் உலகநாடுகளுக்கும் இடையில் இடைக்கால உடன்பாடு எட்டப்பட்டதை தொடர்ந்து ரஷ்ய ஜனாதிபதி குறிப்பிட்ட ஏவுகணைகளை வழங்குவதற்கான தடைகளை நீக்கியுள்ளார்.
குறிப்பிட்ட ஏவுகணைகளை வழங்குவதற்கு ரஸ்யா தயார் என அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
இந்த ஏவுகணை விநியோகம் இரு நாடுகள் மத்தியிலான உறவுகளை மேலும் பலப்படுத்தும் என ஈரானிய பிரதிபாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எனினும் இஸ்ரேல் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
ஈரானிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் ஏற்பட்டுள்ள அணுவாயுத திட்டம் தொடர்பான ஓப்பந்தத்தின் விளைவேயிது என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.