செய்திகள்

ஈரான் பாராளுமன்ற தேர்தலில் அதிபர் ரெளஹானியின் கூட்டணி முன்னிலையில்

மிகுந்த பரபரப்புக்கு இடையே ஈரான் நாட்டில் 290 பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க கடந்த வெள்ளிக்கிழமை வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்த தேர்தலில் மக்கள் அதிக அளவில் ஆர்வத்துடன் வாக்களித்தனர். இதனை தொடர்ந்து தற்போது வாக்குகள் எண்ணும் பணிகள் நடைபெற்று வருகிறது.

முதற்கட்ட முடிவுகளின் படி தற்போதையை அதிபர் ஹாசன் ரோஹனியின் கூட்டணி கட்சி அதிக வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டது.

தலைநகர் தெஹ்ரானில்30 இடங்களிலும் ரோஹனின் கூட்டணி வென்றுள்ளது. இதன் மூலம் தலைநகர் தெஹ்ரானில் அந்நாட்டு ஜனாதிபதி ஹஸன் ரௌஹானியின் கட்சி அமோக வெற்றிபெற்றுள்ளது. தலைநகருக்கு வெளியே உள்ள 56 தொகுதிகளில் 19 இடங்களில் மதவாதக் கட்சியினரும், 9 இடங்களில் அதிபர் ரெளஹானிக்கு ஆதரவான சீர்திருத்தவாதிகளும் வெற்றி பெற்றுள்ளனர். தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியாக 3 நாள்களாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது, நாடாளுமன்றத்தில் பழமைவாதக் கட்சியினர் ஆதிக்கம் நிறைந்து காணப்படுவதால், ரெளஹானி அரசால் பல சீர்திருத்தங்களைக் கொண்டு வர முடியவில்லை எனக் கூறப்படுகிறது. இந்தத் தேர்தல் வெற்றியின் மூலம், மிதவாதியான அதிபர் ஹஸன் ரெளஹானியின் அரசுக்கு, நாடாளுமன்றத்தில் கூடுதல் பலம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.இந்த நாடாளுமன்ற தேர்தலுடன், சட்டமன்ற நிபுனர்களுக்கான் தேர்தலும் நடைபெற இருக்கிறது.

இந்த தேர்தல் முடிவுகள் ஈரான் அரசியலில் குறிப்பிடத்தகுந்த மாற்றத்தை ஏற்படுத்தும் என்று அதிபர் ஹாசன் ரோஹனி டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

வல்லரசு நாடுகளுடன் ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் செய்து கொண்டதை தொடர்ந்து நடைபெற்ற முதல் தேர்தல் இது என்பதல் தேர்தல் முடிவுகளுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.