செய்திகள்

ஈழ விடுதலைப் போராட்டத்தின் முன்னோடி;கி.பி.அரவிந்தன் அவர்களது முதலாமாண்டு நினைவேந்தல்

ஈழ விடுதலைப் போராட்டத்தின் முன்னோடிகளில் ஒருவரான கி.பி.அரவிந்தன் (கிறிஸ்தோபர் பிரான்சிஸ்) அவர்களது முதலாம் ஆண்டு நினைவேந்தல், முகம் கொள் நிகழ்வாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சமூக அரசியற் விடுதலைப் போராளியாக திகழ்ந்த கி.பி.அரவிந்தன் அவர்கள் எழுத்து, ஊடகம், பண்பாடு, என பன்முகத்தளங்களில்  ஆளுமைமிகுந்தவராக இயங்கியவர்.
தலைநகர் பரிசில் இவரது முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு கடந்த சனியன்று இடம்பெற்றிருந்தது.
நினைவு மலர், நினைவுரைகள், நினைவுத்திரையிடல், வில்லிசை, பாடல், கவிதை என பல்வகையிலும் கி.பி.அரவிந்தன் அவர்களது ஆளுமைகளை பற்கோணங்களில் வெளிக்காட்டும் வகையில் நிகழ்வு அமைந்திருந்தது.
ஆய்வாளர் பி.ஏ.காதர், செழுங்கலைப் புலவர் குமரன், கலைஞரும் எழுத்தாளருமான நாச்சிமார் கோவிலடி ராஜன், பத்திரிகையாளரும், படைப்பாளியுமான குணா கவியழகன், ஊடகவியலாளரும், வானொலி நெறியாளருமான றூபன் சிவராசா, முன்னைநாள் கிழக்குப் பல்கலைக் கழக நுண்கலைப் பீடத் தலைவர் பாலசுகுமார் ஆகியோர் உரை நிகழ்த்தியிருந்தனர்.
கி.பி.அரவிந்தன் அவர்களது கவிதைகளை பன்முகப்பாடகர் இந்திரன் குழுவினர் பாடல்களாக இசைத்திருக்க, நாடோடிகள் எனும் சிறுகதையினை வில்லிசைக் கலைஞர் நாச்சிமார் கோவிலடி ராஜன் கதை சொல்லியாக வெளிக்கொணர்ந்திருந்தார். பிரென்சு மொழிக் கவிதைகளும் வாசித்தளிக்கப்பட்டன.
இதேவேளை கி.பி.அரவிந்தன் அவர்களின் நினைவாக காக்கைச் சிறகினிலே இதழ் சார்பில் முன்னெடுக்கப்பட்டிருந்த சிறுகதைப் போட்டி முடிவுகளும் இந்நிகழ்வில் அறிவிக்கப்பட்டிருந்தன.
நெறியாளர் தமிழ் இலக்கிய ஆர்வலர் இ. பத்மநாப ஐயர் அவர்களது வழிகாட்டுதலுடன் உலகளாவிய தமிழ் எழுத்தாளர்களான அ. முத்துலிங்கம் (கனடா), மு புஸ்பராசன் (இங்கிலாந்து), இளவாலை விஜயேந்திரன் (நோர்வே), அ. யேசுராசா (இலங்கை), ஜோ டி குருஸ் (தமிழ்நாடு) ஆகியோர் நடுவர்களாக பங்காற்றியுள்ளனர்.
பரிசில்களும், சான்றுதல்களுக்கும் தேர்வாகியுள்ள சிறுகதைகள் மற்றும் அதன் எழுத்தாளர்களது விபரங்கள் பின்வருமாறு :
முதற்பரிசு :
குருவிகளின் வீடு – சாந்தினி வரதராஜன் (ஜேர்மனி)
இரண்டாம் பரிசு :
ஒற்றை யானை – ஜோசப் அமுதன் டானியல்
(மன்னார் அமுதன் – இலங்கை)
மூன்றாம் பரிசு :
முன்னும் பின்னும் சில நாட்குறிப்புகள் – சோ. சுப்புராஜ் (தமிழ்நாடு – இந்தியா)
ஆறுதல் பரிசுகள் :
4 ஒரு கதையும் கருமாந்திரங்களும் – வேலாயுதம் கிருபதாசன் (நெற்கொழு தாசன் – பிரான்சு)
5 அலுவாக்கரை – எஸ்.ஏ.உதயன் (இலங்கை)
6 நீள் பயணம் – இராசு தம்பையா (மணிதாசன் – ஜேர்மனி)
n10
Fr Fr_1 Fr_3 Fr_6 Fr_10