செய்திகள்

ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரிகளை ஏன் சட்டத்தின் பிடியில் சிக்க வைக்க முடியவில்லை? : பேராயர் கேள்வி

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரிகளை கண்டுபிடிப்பதற்கான விசாரணைகள் முறையாக நடப்பதாக தாம் கருதவில்லை என்று பேராயர் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பொன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

சம்பவம் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் பிரதான சூத்திரதாரிகள் தொடர்பான தகவல்களை காணவில்லை. ஏன் இன்னும் அவர்களை சட்டத்தின் முன் கொண்டு வர முடியாதுள்ளது.

நாட்டின் பாதுகாப்புடன் தொடர்புடைய நிறுவனங்களான குற்றப் புலனாய்வு திணைக்களம், பயங்கரவாத விசாரணைப் பிரிவு மற்றும் அரச புலனாய்வு பிரிவு என்பன இந்த விடயத்தில் ஆழமான விசாரணைகளை நடத்தியுள்ளனவா? என்ற கேள்விகள் எழுகின்றன.

இதனால் ஏன் அவர்களை சட்டத்தின் முன் கொண்டு வர முடியாதுள்ளது என்பதனை எங்களுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெளிவுப்படுத்த வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். -(3)