செய்திகள்

ஈஸ்டர் தாக்குதல்: ‘தீர்வு கிடைக்கும் வரையில் இனிவரும் அனைத்து ஞாயிறும் கறுப்பு ஞாயிறாகவே அனுஷ்டிக்கப்படும்’

ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கும் வரையில் இனி வரும் அனைத்து ஞாயிற்றுக்கிழமையும் கறுப்பு ஞாயிறாகவே கருதப்படும் என்று பேராயர் சபை தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் கறுப்பு ஞாயிறாக அனுஷ்டிக்கப்பட்டதுடன், அதனை தொடர்ந்த இனிவரும் ஞாயிற்றுக்கிழமைகளையும் கறுப்பு ஞாயிறாக அறிவிக்க நடவடிக்கையெடுத்துள்ளதாக கத்தோலிக்க ஆயர்கள் சபையின் தலைவர் வின்சன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

தாக்குதல் சம்பவம் நடைபெற்று இரண்டு வருடங்கள் ஆகின்ற போதும், அதனுடன் தொடர்புடையவர்கள் தொடர்பாக இன்னும் நடவடிக்கையெடுக்கப்படவில்லை என்று அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதனால் நீதி கிடைக்கும் வரையில் போராட்டத்தை தொடருவோம் என்று அவர்கள் கூறியுள்ளனர். -(3)