செய்திகள்

‘ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையில் தற்போதைய அரசாங்கத்தின் மீது விரல் நீட்டும் சாட்சியங்களும் உள்ளன’

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் தற்போதைய அரசாங்கம் தொடர்பான சாட்சியங்களும் உள்ளதாக எதிர்க்கட்சி பிரதம கொரடாவான ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் லக்‌ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவீத்துள்ளார்.

சஹ்ரானின் மனைவியின் சாட்சியங்களில் இந்த அரசாங்கம் பற்றிய தகவல்களும் உள்ளதாகவும், இதனை மூடி மறைக்கும் நோக்கிலேயே குறித்த அறிக்கையை ஆராயவென கூறி குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.

குறித்த குழுவானது சட்டவிரோதமாகவே அமைக்ககப்பட்டுள்ளதாகவும், இதற்கு எதிராக தாம் நடவடிக்கையெடுப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் தாமதிக்காது அந்த அறிக்கையை சட்டமா அதிபருக்கு அனுப்ப அரசாங்கம் நடவடிக்கையெடுக்க வேண்டுமென்று கோரிக்கை விடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். -(3)