செய்திகள்

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரரணை ஆணைக்குழுவின் அறிக்கை சபாநாயகரிடம் கையளிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தனவிடம் கையளிப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தின் சட்ட பணிகள் தொடர்பான பணிப்பாளர் நாயகம் ஹரிகுப்தாவினால் இன்று பாராளுமன்ற கட்டட தொகுதியில் வைத்து சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது.

இந்த அறிக்கையின் பிரதிகள் தற்போது பாராளுமன்ற நூலகத்தில் வைக்கப்பட்டுள்ளதுடன் அதனை எம்.பிக்களுக்கு வாசிக்க முடியுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது. -(3)