செய்திகள்

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக இது வரையில் 197 பேர் கைது

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பாக இது வரையில் 197 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 40 பேர் குற்றப்புலனாய்வு பிரிவிலும் 52 பேர் பயங்கரவாத தடுப்பு பிரிவிலும் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் நேற்றைய தினத்தில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியூதினின் சகோதரர் ரியாட் பதியூதின் மற்றும் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா ஆகியோர் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
-(3)