செய்திகள்

ஈ.பி.டி.பியின் அடுத்த கட்ட நகர்வு என்ன? டக்ளஸ் தலைமையில் இன்று ஆராய்வு

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயற்திட்டங்களை எதிர்காலத்தில் மேலும் வலுப்படுத்தும் வகையில் முன்னெடுக்கப்பட வேண்டிய வேலைத் திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றதாக கட்சியால் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைமைக்காரியாலயத்தில் மேற்படி கலந்துரையாடல் இன்றைய தினம் இடம்பெற்றது.

இதில் கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்டதும், எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ளதுமான அபிவிருத்தி செயற்திட்டங்கள் தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்ட அதேவேளை, முன்னெடுக்கப்படவுள்ள அரசியல் விடயங்கள் குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டு ஆராயப்பட்டது.

இதன்போது கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களின் கருத்துக்கள், ஆலோசனைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டு ஆராயப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதித் தேர்தலில் புதிய ஆட்சி பதவியேற்ற பின்னர் தமது எதிர்காலம் தொடர்பில் ஈ..பி.டி.பி. முதன் முறையாக ஆராய்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.