செய்திகள்

உக்ரைனில் பேரணியில் குண்டுவெடிப்பு

உக்ரைனின் இரண்டாவது முக்கிய நகரான கார்கிவ்வில் தேசப்பற்று பேரணியொன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 10 பேர் காயமடைந்துள்ளனர்.
தேசிய ஐக்கியத்தை வலியுறுத்தும் பேரணியொன்றிற்காக மக்கள் கூடியிருந்த வேளையே இந்த குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளது.
வாகனமொன்றிலிருந்து வீசப்பட்ட குண்டே வெடித்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து உக்ரைனிய கொடியில் போர்த்தப்பட்ட உடலொன்று அம்புலன்சில் எடுத்துச்செல்லப்படுவதற்காக வைக்கப்படடிருக்கும் படம் வெளியாகியுள்ளது.காயமடைந்த ஓருவரை சுற்றி மக்கள் கூட்டம் காணப்படும் படமும் வெளியாகியுள்ளது,
இந்த சம்பவத்தை தொடர்ந்து உக்ரைனிய பொலிஸார் பலரை கைதுசெய்துள்ளனர்.