செய்திகள்

உக்ரைன் படையினர் 6 பேர் பலி

உக்ரைனின் கிழக்கு பகுதியில் இடம்பெற்ற இரு வேறு சம்பவங்களில் 6 உக்ரைனிய படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.
ரஷ்யசார்பு கிளர்ச்சிக்காரர்களின் வலுவான கோட்டை என கருதப்படும் லுகான்ஸ்க்கிற்கு அருகில் உள்ள பகுதியொன்றில் கிளர்ச்சிக்காரர்கள் மேற்கொண்ட தாக்குதலில் 4 உக்ரைனிய படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.
பாலமொன்றை கடந்து செல்வதற்கு உக்ரைனிய படையினரின் வாகனமொன்று முயன்றவேளை தாக்குதல் நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பகுதியில் டாங்கி எதிர்ப்பு கண்ணிவெடி வெடித்ததில் இரு படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.
சனிக்கிழமை நடைபெற்றசம்பவமொன்றிலும் தனது படையினர் மூவர் கொல்லப்பட்டதாக உக்ரைனிய அரசாங்கம் தெரிவித்திருந்தது.யுத்தஉறுத்த உடன்படிக்கை அமுலில் உள்ள நிலையிலேயே இந்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.