செய்திகள்

உக்ரைன் பிரதமர் பெட்ரோ பொரோஷென்கோ ராஜினாமா: புதிய அரசுக்கு வழிவிட்டார்

பிரபலமான தலைவர்கள், கோடீஸ்வரர்கள் ஆகியோர் கடல்கடந்த பல நாடுகளில் வரி ஏய்ப்புச் செய்து பதுக்கி வைத்திருக்கும் பணம் பற்றிய சில இரகசியங்கள் மற்றும் ஆவணங்கள் பனாமா பேப்பர்ஸ் என்ற தலைப்பில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

கடல் கடந்து பணப் பதுக்கலில் ஈடுபட்டுள்ள தலைவர்களில், ரஷ்ய அதிபர் புடின் பெயரும் அம்பலமாகியுள்ளது. பாகிஸ்தான் பிரதமர்  நவாஸ் ஷெரிப், ஈராக்கின் முன்னாள் இடைக்கால பிரதமர் அயாத் அல்லாவி, உக்ரைன் பிரதமர் பெட்ரோ பொரோஷென்கோ, முன்னாள் எகிப்து அதிபர் மகன் அலா முபாரக், ஐஸ்லாந்துப் பிரதமர் சிக்மண்டுர் டேவிட் ஆகியோரும் அடங்குவர்.

இதில், ஐஸ்லாந்து பிரதமர் சிக்மண்டுர் டேவிட் ஏற்கனவே ராஜினாமா செய்துள்ள நிலையில், தற்போது உக்ரைன் பிரதமர் பெட்ரோ பொரோஷென்கோ தனது பதவியை ராஜினாமா செய்ய ஒப்புதல் அளித்துள்ளார்.

இது குறித்த தனது தொலைக்காட்சி பேட்டியில், ”என்னுடைய பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய நான் முடிவு செய்துள்ளேன். ஏப்ரல் 12-ம் தேதி பாராளுமன்றத்தில் இது குறித்த அறிக்கையை சமர்பிக்க உள்ளேன்” என்று பொரோஷென்கோ தெரிவித்தார்.

உக்ரைன் முன்னாள் அதிபர் விக்டர் யானுகோவிச், பதவி விலகிய பின்பு அமைந்த கூட்டணி ஆட்சியில், தேசியவாதக் கட்சியான ஸ்வபோதா கட்சியும் முன்னாள் குத்துச் சண்டை வீரர் விதாலி கிளிட்ச்கோ தலைமையிலான உதர் கட்சியும் இடம்பெற்றிருந்தன. இந்த இரு கட்சிகளிடையே ஏற்பட்டு வந்த பிரச்சனைகளே பதவி விலக முக்கிய காரணம் என்று கருதப்படுகிறது.