செய்திகள்

உங்களை வரவேற்க தயாராகவுள்ளோம்: மைத்திரியிடம் தொலைபேசியில் பேசிய மோடி

இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவிருக்கின்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான தூதுக்குழுவை வரவேற்பதற்கு பாரதமே தயாராகிக்கொண்டிருப்பதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இன்றுக்காலை தொலைபேசி அழைப்பை எடுத்த இந்திய பிரதமர் நரேந்திரமோடி, உலக கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இலங்கை அணிக்கு தனது வாழ்த்துக்களை முதலில் தெரிவித்து கொண்டுள்ளார்.

1996ஆம் ஆண்டு உலக கிண்ணத்தை கைப்பற்றியது போல, இம்முறையும் கிண்ணத்தை இலங்கை அணி கைப்பற்றுவதற்கு முடியவேண்டும் என்று பிரார்த்திப்பதாகவும் இந்திய பிரதரம் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான குழுவினர் எதிர்வரும் 15ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரையிலும் உத்தியோகபூர்வமான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளனர். இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான குழுவினர், இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, இந்திய பிரதமர் நரேந்திரமோடி, உள்ளிட்ட குழுவினருடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்வுள்ளனர்.