செய்திகள்

உச்ச நீதிமன்றம் வந்தார் ஷிரானி! மீண்டும் பிரதம நீதியரசராகப் பிரகடனம்!! (படங்கள்)

உச்ச நீதிமன்றம் முன்பாக இன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களையடுத்து அங்கு வருகைதந்த ஷிரானி பண்டாரநாயக்க மீண்டும் பிரதம நீதியரசர் பொறுப்பை ஏற்றுள்ளார். சட்டரீதியான பிரதம நீதியரசர் ஷிரானிதான் என ஜனாதிபதியும் பிரகடனம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அத்துடன் மோகான் பீரிஸை வெளியேறுமாறும் ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

சட்டவிரோதமான முறையிலேயே ஷிரானி பண்டாரநாயக்க பதவி நீக்கம் செய்யப்பட்டார் என்ற நிலைப்பாட்டை அரசாங்கமும் ஜனாதிபதியும் எடுத்துள்ள நிலையில், அது தொடர்பில் ஜனாதிபதியின் அறிவிப்பு ஒன்றும் வெளியானது.

இதனையடுத்தே ஷரான நீதிமன்றம் வருகை தந்தார். அங்கு அவருக்கு சட்டத்தரணிகள் பெரும் வரவேறபளித்தனர். அதனையடுத்து அவர் தனது அலுவலகத்தில் கடமைகளை மீளஆரம்பித்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

SRI LANKA-POLITICS-JUSTICE 2 03 3g

001