செய்திகள்

”உடனடியாக தேர்தலை நடந்த வேண்டும்”

தேர்தல் ஆணைக்குழுவுக்கு கிடைக்கப்பெற்ற அதிகாரத்தை பயன்படுத்தி தேர்தல் ஆணைக்குழு உடனடியாக தேர்தலை நடாத்தி மக்களின் ஐனநாயக்கத்தை உறுதிப்படுத்த வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

நேற்று (17) கிளிநொச்சியில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே மேற்கண்டாவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஏற்கனவே தேர்தல் ஆணைக்குழு உள்ளூராட்சி மன்ற தேர்தலை அறிவித்து அதனை நிறுத்தியது. இவ்வாறு காலத்தை இழுத்தடிக்காமல் மக்களின் ஐனநாயக உரிமைக்கு சந்தர்ப்பம் வழங்காது தேர்தலை இழுத்தடிக்காது உடனடியாக நடத்தப்பட வேண்டும்.

இலங்கை தமிழரசுக்கட்சியின் நிலைப்பாடும் உடனடியாக தேர்தல் நடாத்தப்பட வேண்டும், ஜனநாயக முறைப்படி மக்கள் தங்கள் விரும்பிய ஒருவரை தெரிவு செய்துக்கொள்ள உரித்துடையவர்கள் என தெரிவித்தார்.
-(3)