செய்திகள்

உடரட்ட மெனிகே ரயிலில் மோதி ஒரே குடும்பத்தில் மூவர் மரணம்!

ரொசல்ல ரயில் நிலையத்திற்கு அருகில் ரயிலில் மோதி தாய், தந்தை மற்றும் அவர்களின் மகன் உள்ளிட்ட மூவர் உயிரிழந்துள்ளனர்.

இன்று முற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணித்த உடரட்ட மெனிகே ரயிலில் மோதியே இவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இவர்கள் ரயிலின் முன்னால் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
-(3)