செய்திகள்

உடலில் ஷெல் துண்டுகளை தாங்கியவர்களாக பாடசாலை செல்லும் மாணவர்கள்: சுரேஷ்

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மாணவர்கள் தமது உடலில் ஷெல் துண்டுகளைத் தாங்கியவர்களாகவே பாடசாலை செல்லுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ் சாவகச்சேரி இந்துக்கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப ஆய்வுகூடத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இவர்களுக்கு இந்த ஷெல்களை அகற்றுவதற்கான மருத்துவ வசதிகளைப் பெற்றுக்கொள்வதற்கான வசதிகளோ வாய்ப்புக்களே இல்லை. அதற்கான நடவடிக்கையை சம்பந்தப்பட்டவர்கள் மேற்கொள்ள வேண்டும். எனவும் சுரேஷ் கோரிக்கை விடுத்தார்.

யாழ்ப்பாணம் சாவகச்சேரி இந்துக்கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப ஆய்வுகூடத்தைராஜாங்க கல்வி அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் நேற்று திறந்து வைத்தார்.

கல்லூரியின் முதல்வர் ந.சர்வேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், மகளிர் விவகாரப் பிரதியமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ்பிரேமச்சந்திரன், வட மாகாணக் கல்வியமைச்சர் த.குருகுலராஜா உட்பட பலரும் கலந்து கொண்டனர்.