செய்திகள்

உடுகம ஸ்ரீ புத்தரக்கித்த தேரரின் பூதவுடல் இலங்கை கொண்டு வரப்பட்டது (படங்கள்)

சிங்கப்பூரில் காலமான அஸ்கிரிய மகாநாயக்கர் வண. உடுகம புத்தரக்கித தேரரின் பூதவுடல் 08.04.2015 அன்று இரவு இலங்கைக்கு எடுத்துவரப்பட்டது

இந்தநிலையில் மகாநாயக்கரின் இறுதிக் கிரியைகள் நடைபெறும் எதிர்வரும் 12ம் திகதி தேசிய துக்கதினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் அரசாங்க கட்டிடங்களில் மஞ்சள் கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு பௌத்த சாசன அமைச்சு பணித்துள்ளது.

தேரர் 08.04.2015 அன்று சிங்கப்பூரின் மவுன்ட் எலிசபெத் வைத்தியசாலையில் தமது 85வது வயதில் காலமானார்.

இவரது பூதவுடலை இலங்கைக்கு எடுத்துவரும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அரசாங்கத்தின் சார்பில் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச 08.04.2015 அன்று சிங்கப்பூர் சென்றிருந்தார்.

மகாநாயக்க தேரரின் இறுதிக் கிரியைகள் கண்டி பொலிஸ் பார்க் மைதானத்தில் நடைபெறவுள்ளன.

Therar (1)

Therar (3)

Therar (4)

Therar (5)

Therar (7)

Therar (8)

Therar (10)