செய்திகள்

உதயங்க பிணையில் விடுதலை

மிக் விமான கொள்வனவு கொடுக்கல் வாங்கல் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
25 இலட்சம் ரூபா பண பிணையிலும் அதற்கு மேலதிகமாக 500 இலட்சம் ரூபா என்ற அடிப்படையில் இரண்டு சரீரப் பிணையிலும் அவரை விடுதலை செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். -(3)