செய்திகள்

உதயங்க விவகாரம்: உயர் அதிகாரி ஒருவரை உக்ரேயினுக்கு அனுப்பத் தயாராகும் இலங்கை

ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவின் ஆயுத விவகாரம் குறித்து உக்ரைன் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கும் வகையில் இராஜதந்திர மட்ட உயரதிகாரியொருவரை அந்நாட்டிற்கு அனுப்ப அரசாங்கம் தயாராகவிருப்பதாக வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மஹீசினி கொலன்னே தெரிவித்தார்.

உக்ரைன் அரசாங்கத்தினால் உதயங்க வீரதுங்க மீது சுமத்தப்பட்டுள்ள ஆயுத விவகார குற்றச்சாட்டு தொடர்பிலான முழுமையான விசாரணைகள் இன்னமும் முடிவடையாத நிலையில், இலங்கையிலிருந்து மேற்படி உயரதிகாரியொருவரை அனுப்புவதற்கு அந்நாட்டின் அனுமதிக்காக காத்திருப்பதாகவும் கொலன்னே சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவின் பொருட்களை துறைமுகத் திலிருந்து வெளியேற்றுவதற்கு அவர் சார்பிலான அட்டோணி தத்துவத்தை வழங்க வெளி விவகார அமைச்சு மறுப்பு தெரிவித்துள்ள அதேநேரம், இலங்கை குடிவரவு, குடியகல்வு திணைக்களம் இலத்திரனியல் மார்க்கமாக அவரது இராஜதந்திர கடவுச்சீட்டினை யும் செயலிழக்கச் செய்துள்ளதென அவர் கூறினார்.

தலைமறைவாகியுள்ள உதயங்கவின் பொருட்கள் இன்னமும் வெளியேற்றப் படாமல் கொழும்பு துறைமுகத்தில் தேங்கி கிடப்பதாகவும் அமைச்சின் பேச்சாளர் குறிப்பிட்டார்.

வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மஹீசினி கொலன்னேயினால் நடத்தப்படும் வாராந்த செய்தியாளர் மாநாடு நேற்று புதன்கிழமை அமைச்சில் நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்ட விளக் கங்களை அளித்தார்.

ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க, தூதுவராக பதவி வகித்தபோது உக்ரைன் நாட்டின் 19 தீவிரவாதிகளுக்கு ஆயுதங்களை பெற்றுக்கொடுத்தார் என்ற குற்றச்சாட் டினை உக்ரைன் அரசாங்கம் சுமத்தியி ருந்தது. இலங்கை மற்றும் இந்தியாவுக்கான உக்ரைன் தூதுவர் புதுடில்லியில் உள்ளார். இவர், உக்ரைன் அரசாங்கத்தின் இந்த குற்றச்சாட்டினை கடந்த 2014ஆம் ஆண்டு நவம்பரில் இலங்கைக்கு தெரியப்படுத் தியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து உக்ரைன் அதி காரிகளை சந்திப்பதற்காக கடந்த வருடம் டிசம்பர் மாதம் அமைச்சிலிருந்து இர ண்டு உயர்மட்ட அதிகாரிகள் உக்ரைனிற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர்.

இலங்கை மற்றும் இந்தியாவுக்கான உக்ரைன் தூதுவர் கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி இலங்கை வந்திருந்தபோது வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவை சந்தித்து பேச்சு நடத்தினார்.

இதன்போது உதயங்க வீரதுங்க தொடர் பிலான விசாரணைகளுக்கு இலங்கை அரசாங்கம் முழுமையான ஒத்துழைப் பினை வழங்குமென்றும் அதற்காக இராஜதந்திர உயர்மட்ட அதிகாரியொரு வரை அனுப்ப தயாரென்றும் கூறியிருந் தார். இதற்கு உக்ரைன் தூதுவர் விசா ரணைகளின் முடிவுகளை இலங்கைக்கு அறியத் தருவதாகவும் தெரிவித்திருந்தார். அதன்படி அந்நாட்டு அதிகாரிகளால் முன்னெடுக்கப்படும் விசாரணைகளைப் பற்றி அறிந்துகொள்வதற்காக காத்திருப் பதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் கடந்த மே மாதம் 05 ஆம் திகதி உதயங்கன வீரதுங்க ஈரானின் டெஹரான் நகரிலுள்ள இலங்கை தூதரகத்திற்கு பேரில் சென்று தனது பொருட்கள் யாவும் இலங்கைக்கு அனுப்பப்படுவதாகவும் அதனை அவர் சார்பில் வெளியேற்ற அட்டோனி தத்துவம் வழங்கப்படவேண்டுமெனவும் கோரிக்கை விடுத்ததுடன் அவரை தொடர்புகொள்வதற்காக ஒரேயொரு மின்னஞ்சல் முகவரியை மாத்திரமே வழங்கிச் சென்றுள்ளார்.

அமைச்சின் தீர்மானங்களுக்கமைய இராஜதந்திர கடவுச்சீட்டினை திருப்பி தந்தால் மாத்திரமே அட்டோனி தத்துவம் வழங் கப்படுமென டெஹரான் தூதரத்திலிருந்து உதயங்கனவிற்கு மின்னஞ்சல் அனுப் பப்பட்டது. எனினும் அதற்கு அவர் இராஜதந்திர கடவுச்சீட்டினை வழங்க மறுப்பு தெரிவித்திருந்தார். அத்துடன் அவருடனான தொடர்புகள் யாவும் துண்டிக்கப்பட்டுள்ளன என்றும் கொல ன்னே தெரிவித்தார்.

உதயங்கன தற்போது தலைமறை வாகியுள்ளார். ஆனாலும் குடிவரவு, குடியகல்வு திணைக்களம் இலத்திரனியல் ஊடாக அவரது இராஜதந்திர கடவுச்சீட்டினை ரத்துச் செய்துள்ளது. இதுகுறித்து வெளிவிவகார அமைச்சு தமது தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகரால யங்களுக்கூடாக அனைத்து நாடுகளுக்கும் அறியத்தந்துள்ளது என்றும் அவர் கூறினார்.