செய்திகள்

உதவி இயக்குனரை மணக்கிறார் நடிகை விஜயலட்சுமி

‘சென்னை 600 028’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் விஜயலட்சுமி. ‘அஞ்சாதே’, ‘ஆடாம ஜெயிச்சோமடா’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளா. விஜயலட்சுமிக்கு திருமணம் நிச்சயமாகியுள்ளது. மணமகன் பெயர் பிரோஸ் முகமது. இவர் உதவி இயக்குனராக இருக்கிறார்.

இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். இவர்கள் காதலுக்கு இரு வீட்டு பெற்றோரும் சம்மதம் தெரிவித்துள்ளனர். விஜயலட்சுமி, பிரோஸ் முகமது திருமணம் செப்டம்பர் மாதம் சென்னையில் நடக்கிறது.

இந்த தகவலை விஜயலட்சுமியின் சகோதரி நிரஞ்சனி தனது பேஸ்புக்கில் தெரிவித்து உள்ளார். திருமணம் நடப்பதையொட்டி விஜயலட்சுமி சினிமாவை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார். படங்கள் தயாரிக்கும் பணியில் ஈடுபடப்போகிறாராம்.

இவர் தயாரிக்கும் முதல் படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாதம் துவங்குகிறது. இந்த படத்துக்கான நடிகர், நடிகை மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் தேர்வு நடக்கிறது.