செய்திகள்

உப்போடை விவேகானந்தா பெண்கள் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற முதலாம் தர மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை காலை சிறப்பாக நடைபெற்றது. மட்டக்களப்பு கல்வி வலயத்துக்குட்பட்ட கல்லடி,உப்போடை விவேகானந்தா பெண்கள் மகா வித்தியாலயத்திற்கு முதலாம் தரத்திற்கு மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் திருமதி திலகவதி தலைமையில் நடைபெற்றது.

மட்டக்களப்பு இராம கிருஸ்ண மிசனில் மாணவர்கள் வழிபாடுகளை மேற்கொண்டு மிசனின் சுவாமிகளிடம் ஆசி பெற்றதன் பின்னர் ஊர்வலமாக அழைத்துவரப்பட்டனர். இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண மேலதிக கல்விப்பணிப்பாளர் எஸ்.மனோகரன் கலந்துகொண்டதுடன் சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு வலய கல்விப்பணிப்பாளர் கே.பாஸ்கரன் கலந்துகொண்டார்.

இதன்போது பெருமளவான பெற்றோரும் பாடசாலையின் பழைய மாணவர்களும் கலந்து கொண்டனர்.

 A C E F G H I J L M N O P Q R S