செய்திகள்

உம்மன் சாண்டி பயணம் செய்த கார் விபத்து……!

கேரள முதலமைச்சர் உம்மன் சாண்டி பயணம் செய்த கார் விபத்துக்குள்ளது. இதில், அவர் காயமின்றி உயிர் தப்பியதாக தெரிவிக்கப்படுகின்றது.

கோழிக்கோட்டில் நடைப்பெற்ற குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கலந்துகொண்ட நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர், நேற்றிரவு (ஞாயிற்றுக்கிழமை) முதல்வர் உம்மன் சாண்டி காரில் திரும்பிக் கொண்டிருந்தார்.

புதுப்பள்ளி திரும்பிய போது நேற்று அதிகாலை இரண்டரை மணியளவில் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

தடுப்புச்சுவர் மீது கார் மோதியதில் முன்புறம் அமர்ந்திருந்த சாண்டியின் பாதுகாவலர் படுகாயமடைந்ததாகவும், உம்மன் சாண்டி ஆசன பட்டி அணிந்திருந்ததால் காயங்களின்றி தப்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் வேறு வாகனம் மூலம் உம்மன் சாண்டி பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டதோடு, படுகாயமடைந்த அவரது பாதுகாவலருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது.

மேலும் இவ்விபத்து குறித்து, பொலிஸார்  விசாரணை நடத்தி முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

N5