செய்திகள்

உயரும் உயிரிழப்புகள் : 199 நாடுகளில் 500,000ற்கும் மேல் பாதிப்பு – அமெரிக்காவிலேயே அதிகம்

கொரோனா வைரஸ் தற்போது உலகில் 199 நாடுகளுக்கும் பரவியுள்ளது.
இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் உலகம் பூராகவும் பல்வேறு நாடுகளில் 3178 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதில் இத்தாலியில் மாத்திரம் 919 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை சீனாவில் கொரோனா ஆரம்பமான நாள் முதல் இது வரையில் 6 இலட்சம் பேர் வரையில் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் மொத்தமாக 27 ஆயிரத்து 356 பேர் நேற்று வரையில் உயிரிழந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை அமெரிக்காவிலேயே அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு இலட்சத்தையும் தாண்டியுள்ளது. அத்துடன் அங்கு நேற்றைய தினத்தில் மாத்திரம் 16ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 312 பேர் உயிரிழந்துள்ளனர். -(3)