செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஓராண்டு நினைவு – யாழ் ஆயர் இல்லத்தில் அஞ்சலி

இலங்கை தீவில் நூற்றுக் கணக்கான அப்பாவி மக்களின் உயிர்களைப் பறித்தும் அங்கச் சிதைவுகளை ஏற்படுத்தியதுமான பாரிய பயங்கரவாத குண்டுத்தாக்குதல்கள் இடம்பெற்று இன்றுடன் ஓராண்டு நிறைவுற்றுள்ளது.நாட்டு மக்களை மட்டுமல்லாது உலகத்தையே உலுக்கிய இந்த கோரத் தாக்குதல்களினால் ஏற்பட்ட ரணங்கள் இன்றும் ஆறாத வடுவாகவே ஆழ்மனங்களில் பதிந்துள்ளன.இந்நிலையில் இலங்கையில் நடாத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு ஈஸ்டர் தாக்குதல் ஓராண்டு நினைவு அஞ்சலி வழிபாடு யாழ் ஆயர் இல்லத்தில் இன்று காலை இடம்பெற்றது.யாழ் மறைமாவட்ட குரு முதல்வர் ஜெபரட்னம் அடிகளார் தலைமையில் ஆயர் இல்லத்தில் இன்று காலை 8.45 மணிக்கு இந்த நினைவேந்தல் வழிபாடு இடம்பெற்றது.

இதன் போது தாக்குதலில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் கொரோனோ தொற்றிலிருந்து நாட்டு மக்கள் மிக விரைவில் மீள வேண்டுமென்றும் பிரார்த்தனை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.இந் நினைவேந்தல் வழிபாட்டில் உலகத் தமிழர் பேரவையின் தலைவர் இமானுவேல் அடிகளார் உள்ளிட்ட மதகுருமார்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.குண்டுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு இன்றுடன் ஒரு வருடம் நிறைவுபெற்றுள்ள போதிலும் இலங்கை மக்களின் வடுவாக உள்ள இந்த துன்பியல் சம்பவம் இன்றும் வலிகளால் நிறைந்து மனங்கள் கனத்து நிற்கின்றன.(15)1 2 3 4