செய்திகள்

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலில் காயமடைந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் பெண் உயிரிழந்தார்

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் கடந்த வருடம் ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் காயமடைந்த 26 வயதான நிரின் ப்ளோரிடா என்ற இளம் பெண் கடந்த 09 மாதங்களாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்தார்.குறித்த யுவதி 09 மாதங்களாக வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த போதிலும் நேற்று முன்தினம் இரவு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த யுவதி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.(15)