செய்திகள்

உறுதியான நிலைப்பாட்டுக்கு தலைவணங்குகிறேன்: சம்பூர் உண்ணாவிரதிகள் மத்தியில் சுரேஷ்

எமது சொந்த மண்ணைத்தவிர வேறு எந்த இடத்திலும் குடியேற மாட்டோம் என்ற உங்களின் உறுதியான நிலைப்பாட்டிற்கு நான் தலைவணங்குகிறேன் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளருமான சுரேஷ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சாகும் வரையிலான உண்ணாவிரதத்தை மேற்கொண்ட திருகோணமலை சம்பூர் மக்களை சந்தித்து அவர்களின் உண்ணாவிரதத்தை முடித்துவைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்:-

நீங்கள் எடுத்த ஒன்பது ஆண்டுகால விடா முயற்சிதான் இன்று உங்களை உங்கள் சொந்த மண்ணுக்கு அழைத்துச்செல்கிறது. ஆகவே நான் முதலில் உங்கள் எல்லோரையும் வணங்குகிறேன். உங்களது பிடிவாதமும், திடசங்கரப்பமும் தான் உங்களை உங்கள் சொந்த நிலத்திற்கு அழைத்துச்செல்கிறது.

ஆட்சியாளர்கள் கூறியதைப் போன்று நீங்கள் வேறு இடங்களில் குடியேற சம்மதித்திருந்தால் இது நடந்திருக்காது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றத்திலும், சர்வதேசத்திலும் உங்களுடைய சம்பூர் கிராமம் போருக்கு முன்னர் எப்படி இருந்தது, போருக்குப் பின்னர் எப்படி இருக்கிகிறது போன்ற விடயங்களை கூறி வந்திருக்கிறோம் எப்படி அழகாக இருந்த கிராமம் இன்று ஒண்றுமே இல்லாத பொட்டல் வெளியாக மாற்றப்பட்டுள்ளது.

சம்பந்தர் ஐயா பலமுறை பாராளுமன்றத்தில் பேசியிருக்கிறார் அவர் பேசும் பொதெல்லாம் ஓம் விடுவோம், சம்பூர் மக்களை மீள் குடியேற்றுவோம் என்று அட்சியாளர்கள் கூறுனார்ளே தவிர வேறு எதுவும் நடக்கவில்லை மாறாக இன்று நீங்கள் செய்த போராட்டம்தான் எங்களை உங்கள் சொந்த ஊருக்கு அனுப்புகின்றது.

இன்று கொழும்பு உயர் நீதிமன்றத்தில் ஒரு தீர்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது நீங்கள் உங்கள் சொந்த இடத்திற்குப் போகலாமென்று அதாவது சம்பூர் மக்கள் தமது சொந்த இடத்திற்குப் போவதற்கான தடையுத்தரவு விலக்கப்பட்டுள்ளது, சம்பூர் மக்கள் மீளக்குடியேறுவதற்கு எந்தத் தடையுமில்லை என தெட்டத் தெளிவாக கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை தற்போது உங்களுடைய பாராளுமன்ற உறுப்பினர் சம்பந்தர் ஐயா மாகாணசபை உறுப்பினர் நாகேஸ்வரன் ஊடாக இந்த செய்தியை இப்போது தெரிவித்திருக்கிறார். ஆகவே இந்தப் போராட்டத்தை ஆரம்பித்து வைத்த உங்களது தலைவர்கள் போராட்டத்தை நிறைவு செய்து வைப்பார்கள்.

சில சமயங்களில் வேறு ஏதாவது கோனங்கித்தனமாக நடந்தால் சில சமயங்களில் வேறு யாராவது வேறுவிதமாக ஏதாவது செய்தால் எமது போராட்டம் இதிலும் விட பன்மடங்காக அதிகரிக்கும் வடக்கு கிழக்கு என்ற பேதமில்லாமல் மக்கள் போராட்டம் மேலும் தீவிரப்படுத்தப்படும் என்றார் மக்களின் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் நாகேஸ்வரன் என பலரும் கலந்து கொண்டனர்.

02

01

00