செய்திகள்

உறுப்பினர்களுடனான முரண்பாடுகள் இன்னமும் தீர்க்கப்படவில்லை: மலையக மக்கள் முன்னணியின் தலைவி

தனக்கும் மலையக மக்கள் முன்னணியின் ஏனைய உறுப்பினர்களுக்கிடையிலான ஏற்பட்ட கட்சி முரண்பாடுகள் இதுவரையும் தீர்க்கப்படவில்லை என மலையக மக்கள் முன்னணியின் தலைவி திருமதி. சாந்தினி சந்திரசேகரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

எமது ஊடகவியலாளர் அவரிடம் தொடர்பு கொண்டு வினாவிய போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்..

என்னை பொருத்தவரையில் கட்சியில் இன்னும் முரண்பாடுகள் இருக்கின்றன. இதன் காரணமாக கட்சியில் பல்வேறுப்பட்ட சிக்கல்கள் காணப்படுகின்றது. அத்தோடு கட்சியில் தற்போது இருக்கின்றவர்களின் செயல்பாடுகள் அனைத்தும் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி வருகின்றது.

இதேவேளை நடைபெறவுள்ள தேர்தலிலும் இவர்களின் செயல்பாடுகள் இவ்வாறு தொடருமாயின் எதிர்காலத்தில் கட்சி பாதிக்கப்படும்.

மற்றவர்கள் மத்தியில் இப்பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தாலும் இன்னும் சில பிரச்சினைகள் சரியான முறையில் தீர்க்கப்படவில்லை.

இதனால் தொடர்ச்சியாக கருத்து முரண்பாடுகள் இடம்பெற்ற வண்ணமே உள்ளது.

அவர்களின் விருப்பத்திற்கேற்பவே தான் செயல்படுகின்றார்கள் அது தான் உண்மை.

ஏற்கனவே நடந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படாததன் காரணமாக நான் அவர்கள் அழைத்த எந்த கூடத்திற்கும் கலந்து கொள்ளவில்லை.

இதேவேளை 01.07.2015 அன்று அட்டனில் இடம்பெற்ற மலையக மக்கள் முன்னணியின் ஊடகவியலார் சந்திப்பில் திருமதி.சாந்தினி சாந்திரசேகரன் குறித்து கட்சியின் அரசியல்துறை தலைவர் வீ.இராதாகிருஷ்ணன் கருத்து வெளியீடுகையில் கடந்த காலங்களில் மலையக மக்கள் முன்னணியின் தலைவி திருமதி. சாந்தி சந்திரசேகருடன் சில கருத்து வேறுபாடுகள் காணப்படாலும் இம்முறை நடைபெறவுள்ள தேர்தலில் முழு பங்களிப்பினை அவர் வழங்குவதற்கு சம்மந்தம் தெரிவித்துள்ளதாகவும் எதிர்காலத்தில் கட்சியுடன் இணைந்து வலுப்படுத்தவதற்காக இனக்கம் தெரிவித்ததாக அவர் தெரிவித்திருந்தார்.

அந்தநிலையில் இது குறித்து மலையக மக்கள் முன்னணியின் தலைவி திருமதி. சாந்தி சந்திரசேகரன் அதற்கு மாறுப்பட்ட கருத்துக்களை வெளியிட்டுள்ளமை குறிப்பிடதக்கது.