உலககிண்ணத்தை கைப்பற்றியது ஆஸ்திரேலியா
குறைந்த பந்துகள் விளையாடப்பட்ட உலககிண்ணம் இதுதான். வேகப்பந்துவீச்சாளர்களுக்கு ழுழுமையாக சாதகமானதாக காணப்படாது என கருதப்பட்ட மெல்பேர்ன் ஆடுகளத்தில் ஆஸி வேகப்பந்துவீச்சாளர்கள் முழுமையான வேகத்தில் பந்துவீசி அணிக்கு ஐந்தாவது உலககிண்ணத்தை பெற்றுக்கொடுத்துள்ளனர்.
நியுசிலாந்திற்கு எதிராக பல அற்புதமான யோர்க்கர்களை வீசிய ஸ்டார்க் ஜோன்சன் இருவரும் தங்களிடையே 5 விக்கெட்களை பகிர்ந்துகொண்டனர்.ஏனையவர்களை விட வேகம் குறைந்தவராகவும் ஆனால்அவர்களை விட புத்திசாலித்தமான பந்துவீசியவருமாக காணப்பட்ட போக்னர் மூன்று விக்கெட்களை வீசினார்.
நியுசிலாந்து அணி 45 ஓவரிலேயே 183 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. பதிலுக்கு ஆஸி துடுப்பபெடுத்தாடிய வேளை ஆரம்ப பதட்டங்கள் காணப்பட்டன, குறிப்பாக பின்ஜ் விரைவிலேயே ஆட்டமிழந்ததன் காரணமாக ஓரு வகை பதட்டம் காணப்பட்டது.
எனினும் அரைசதங்களை பெற்ற கிளார்க்,ஸ்மித் இருவரும் 34 ஓவர்களிலேயே உலககிண்ணத்தை கைப்பற்றினர்.
72 பந்துகளில் அதிரடியாக 74 ஓட்டங்களை பெற்ற அணித்தலைவர்மைக்கல் கிளார்க்கிற்கு மைதானமே எழுந்து நின்று கரகோசம் செய்தது.
அவரிற்கு பின்னர் அணிக்கு தலைமைதாங்கப்போகின்றார் என எதிர்பார்க்கப்படும் ஸ்மித் 4 ஓட்டங்களை பெற்று அணியை வெற்றிக்கிட்டுச்சென்றார்.
இந்த உலககிண்ணம் முழுவதும் முதலில் துடுப்பெடுத்தாடிய அணிகள் இறுதி 15 ஓவர்களில் ஆட்டத்தின் போக்கை மாற்றியிருந்தன.
ஆனால் இந்த வரலாற்றை ஆஸி அணி இன்று மாற்றியது.இறுதிபத்து ஓவர்களில் நியுசிலாந்தின் முதுகெலும்பை அது முறித்தது.
எலியட், டெய்லர் ஜோடி 111 ஓட்டங்களை பெற்றவேளை நியுசிலாந்து அணி 300 ஓட்டங்கள் குறித்து கூட சிந்தித்திருக்கும்,எனினும்35 ஓவரில் போக்னர் வீழ்த்திய இரு விக்கெட்கள் அணியின் தலைவிதியை மாற்றின.
அவரின் வேகம் குறைந்த பந்திற்கு முதலில் டெய்லர் ஆட்;டமிழந்தார், பின்னர் ஆன்டர்சன்அற்புதமான யோக்கர் பந்திற்கு ஆட்டமிழந்தார். ஸ்டார்க்கின் அடுத்த ஓவரில்ரோன்ஜி ஆட்டமிழக்க டானியல் வெட்டோரியை ஜோன்சன் வெளியேற்றினார்.
இதன் காரணமாக அடித்து ஆட முயன்ற எலியட் போக்னரின் பந்திற்கு ஆட்டமிழக்க , சவுதி ரன்அவுட் ஆக்கப்பட்டார். இதன் காரணமாக இந்த இறுதிபோட்டி எதிர்பார்த்த டேவிட் கோலியாத் கதைபோன்று அமையால் போனது. அதிஸ்டமும் ஆஸி அணிக்கு சாதகமாக விளங்கியது. நியுசிலாந்து அணியின் வயது கூடிய வீரர் டானியல்வெட்டோரி காயம் காரணமாக 5 ஓவர்களே பந்துவீசினார்.
முன்னைய போட்டிகளை போன்று இறுக்கமான களத்தடுப்பு வியூகத்தை மக்கலம் அமைத்தார். எனினும் வோர்னர் அடித்து ஆடமுயன்றதன் காரணமாக ஓரு ஸ்லிப்பை மக்கலம் அகற்ற அடுத்தபந்தில் அந்த இடத்தில் வோர்னர் கட்ச் கொடுத்தார்.
இதேபோன்று 15 ஓவரில் ஹென்றியின் பந்து ஸ்மித்தின் விக்கெட்டினை உராசியபோதிலும் பெய்ல்ஸ் விழவில்லை.