செய்திகள்

உலககிண்ணத்தை வெல்வதற்கான திறமை தென்னாபிரிக்க அணிக்குள்ளது

2015 உலககிண்ணத்தை தென்னாபிரிக்கா வெல்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அந்த அணியின் ஜே.பி டுமினி தெரிவித்துள்ளார்.
உலகிண்ணத்தை வெல்வதற்கு தகுதியான அணி எம்மிடமுள்ளது, அந்த திறமையை முழுமையாக பயன்படுத்திவெல்லவேண்டியது எங்களுடைய கடமை என அவர் தெரிவித்துள்ளார்
உலககிண்ண போட்டிகள் ஆரம்பமாவதற்கு முன்னர்,எங்களுடைய வெற்றிவாய்ப்புகள் குறித்து அதிகம் தெரிவிக்க கூடிய அணியல்ல நாங்கள்,எனினும் நாங்கள் எங்கள் மீது நம்பிக்கை கொண்டுள்ளோம்,ஓரு அணியாக எங்களால் என்ன செய்யமுடியும் என்பது எங்களுக்கு தெரியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். அதேவேளை எங்களை தயார்படுத்துவது முக்கியமானது என்பது எங்களுக்கு தெரியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.