செய்திகள்

உலககிண்ணத்தை வெல்வதில் தீவிரமாக உள்ளதை வெளிப்படுத்திய இந்தியாவும்- அழுத்தத்தால் துவண்ட தென்னாபிரிக்காவும்

அவுஸ்திரேலியாவில் இரண்டரை மாதங்கள் எந்த வெற்றியையும் பெறாதபோதிலும் எவரும் இந்திய அணியை ஏன் குறைத்து மதிப்பிடவில்லை என்பதை இந்தியா இன்று காண்பித்தது.
களத்தில் அவர்கள் மிகப்பெரும் அணியாக விளங்கமாட்டார்கள் எனினும் முக்கியமான போட்டிகளில் அவர்கள் அமைதியாக காத்திருப்பார்கள்,
இந்த பிரிவில் யார் முதலாவதாக வருவது என்பதை தீர்மானிக்கும் இன்றைய போட்டியில் தென்னாபிரிக்கா பதட்டமடையும் வரை இந்தியா காத்திருந்தது.தென்னாபிரிக்கா இந்தியா எதிர்பார்த்தது போல தவறுகளை இழைத்து தோற்றது.
உலககிண்ணப்போட்டிகளில் இந்தியா தென்னாபிரிக்காவை வெல்வது இதுவே முதற்தடவை.
இந்தியா முதலில் துடுப்பெடுத்தாடிய வேளை சிகார் தவானும், கோலியும் பழையபாணியில் மெதுவாக ஆரம்பித்தனர். இந்தியாவிற்கு ஓரு வலுவான அடித்தளத்தையிட்டுள்ளதை உறுதிசெய்த பின்னர் அடித்தாட தொடங்கினர்.
தவான் கடந்த மூன்று மாதங்களில் தனது முதலாவது சதத்தை பெற்றார்.தென்னாபிரிக்காவிற்கு எதிராக உலக கிண்ணப்போட்டிகளில் பெறப்பட்ட அதிகூடிய ஓட்டங்களும் அதுவே.கோலி 46 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார், எனினும் ரஹானே 79 ஓட்டங்களை பெற்றார்.
பந்து வீசிய வேளை இந்தியா இலகுவான வழியை பின்பற்றியது,குறைந்தளவு மோசமான பந்துகளை வீசிவிட்டு தென்னாபிரிக்கா அழுத்தங்கள் காரணமாக தவறுகள் செய்யும் வரும் காத்திருப்பது இந்தியாவின் திட்டம்.இந்தியா திட்டமிட்டது மாத்திரமல்லாமல் அதனை சிறப்பாக நிறைவேற்றியது.
முதல் மூன்று ஓவர்களில் மோசமான பந்து என்று எதுவும் இருக்கவில்லை இதனால் அடித்துஆட வேண்டியநிலைக்கு தள்ளப்பட்ட டிகொக் சமியின் பந்தில் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். பவுண்டரிகளை இலகுவாக பெறமுடியாமல் சிரமப்பட்ட அம்லா,குக் சொட்டிற்கு ஆட்டமிழந்தார்.
பின்னர் டிவில்லியர்சும், டுபிளசியும் மூன்றாவது விக்கெட்டிற்கு 68 ஓட்டங்களை சேர்த்தனர் எனினும் ஒரு ஓவரிற்கு தேவையான ஓட்டத்தின் அளவு அதிகரித்துக்கொண்டே சென்றது,இந்தியா இலகுவாக ரன்களை களத்தடுப்பிலும் விட்டுக்கொடுக்கவில்லை. இதன் காரணமாக ஆபத்தான இரண்டாவது ஓட்டத்தை பெற முயன்ற தென்னாபிரிக்க அணிதலைவர் மோகிட் சர்மாவினால் ரன் அவுட் ஆக்கப்பட்டார்.
அதன் பின்னர் தென்னாபிரிக்கா ஏதாவது அதிசயம் நடந்தால் மாத்திரமே வெற்றிபெறலாம் என்ற நிலை காணப்பட்டது.தென்னாபிரிக்கா சந்தித்த கடும் அழுத்தங்கள் காரணமாக அது சாத்தியமாகவில்லை,
எதிர்பாரத களத்தடுப்பு

தென்னாபிரிக்கா அதிகளவிற்கு பதட்டப்பட்டது,அம்லா 53 ஓட்டங்களில் தவானை ;தவறவிட்டார், தென்னாபிரிக்கா மிகச் சமீபத்தில் இவ்வளவு மோசமாக களத்தடுப்பில் ஈடுபட்டதில்லை.