செய்திகள்

உலக கிண்ணப் போட்டிகளில் உற்றுநோக்க வேண்டிய 5 அணித்தலைவர்கள்

பிரன்டன் மக்கலம்–அடித்தாடுவதில் விருப்பமுள்ள மக்கலம் ரொஸ்டெயிலரிடமிருந்து தலைமைப்பொறுப்பை ஏற்றவேளை நியுசிலாந்து அணி பலவீனமான நிலையில் காணப்பட்டது.  எனினும் அதேவீரர்களை வைத்துக்கொண்டே உலககிண்ண போட்டிகளில் சவாலாக விளங்ககூடிய அணியை மக்கலம் உருவாக்கியுள்ளார்.  2014 ம் ஆண்டே நியுசிலாந்து அணியின் வெற்றிகரமான ஆண்டாக மாறியது. கேன்வில்லியம்சன், டெய்லர், ரொன்சி ஆகியோர் சிறந்த நிலையிலுள்ளனர்.மக்கலம் ஆக்கிரோசமான, புதிய உத்திகளுடன் கூடிய தலைமைத்துவத்தை வெளிப்படுத்தியுள்ளார்.அவரது தலைமைத்துவம் மூன்று வகையான போட்டிகளிலும் வெற்றியை கொண்டுவந்துள்ளது.தற்போதுள்ள அணிதலைவர்களில் மிகச்சிறந்தவராக அவர் காணப்படுகின்றார்.

மைக்கல் கிளார்க்
கிளார்க் துணிச்சலானவர்,புதிய உத்திகளை கண்டுபிடிப்பவர் வீரர்களை வழிநடத்துவதில் திறமைசாலி,முன்னைய அவுஸ்திரேலிய அணிகளை போல அவரின் அணியில் ஜாம்பவான்கள் எவருமில்லை. எனினும் பயிற்றுவிப்பாளர் லீமனுடன் இணைந்து சிறந்தஅணியொன்றை அவர் உருவாக்கியுள்ளார்.
காயங்கள் காரணமாக அவர் விளையாட முடியாத நிலை ஏற்படலாம்,எனினும் தற்போதுள்ள அணித்தலைவர்களில் மிகவும் துணிச்சலானவர் கிளார்க்.

எம்எஸ் டோனி
டெஸ்ட் போட்டிகளில்அவரது தலைமை சிறப்பாக இல்லாத போதிலும் ஒரு நாள் போட்டிகளில் மிகச்சிறந்த தலைவர் அவர். அவர் பயன்பபடுத்தும் தந்திரேபாயங்கள் எதிரணியினரை மாத்திரமல்ல அவரது அணியினரையே திகைப்பில் ஆழ்த்தக்கூடியவை. நெருக்கடியான சூழ்நிலைகளில் இவரை நம்பலாம்,ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்துவைக்ககூடியவர்.அவரது தலைமையின் கீழ் இந்திய அணி முக்கிய போட்டிகள் அனைத்திலும் வெற்றிபெற்றுள்ளது.  இந்தியாவிற்கான வெற்றிவாய்ப்புக்கள் இம்முறை குறைவாக காணப்பட்டாலும் அணிக்கு தலைமை தாங்குவதற்கு அவரே சிறந்தவர், பொருத்தமானவர்.

ஏஞ்சலோ மத்யுஸ்
அணிதலைவராக பொறுப்பெற்ற பின்னர் அவரது துடுப்பாட்டத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் மிக முக்கியமானது.சங்கா,மகேல, தில்சானுடன் இணைந்து அணியின் துடுப்பாட்டத்தின் தூணாக அவர் விளங்குகின்றார். தலைமைத்துவத்திற்கான திறன்களையும் சங்கா ,மகேலவிடமிருந்து அவர் சுவீகரித்துள்ளார்.  2015 உலகிண்ணம் என்பது அவர் சாதித்துக்காட்ட வேண்டிய முதலாவது மிகப்பெரும் அரங்கு.         இதுவரை அவர் அணித்தலைவர் என்ற வகையில் வெற்றிபெற்றுள்ளார்.ஆனால் இந்த சகல துறை ஆட்டக்காரரிற்கு உலககிண்ணமே தன்னை நிருபிப்பதற்கான மிகப்பெரும் சவால்.

ஏபி டிவில்லியர்ஸ்
சுந்தேகத்திற்கு இடமின்றி தற்போதுள்ள துடுப்பாட்ட வீரர்களில்தலைசிறந்தவர்,அவரால் விளையாட முடியாத சொட்கள் எதுவுமில்லை, அற்புதமான களத்தடுப்பில் ஈடுபடக்கூடியவர். இந்த உலககிண்ணம் தென்னாபிரிக்காவிற்கு முதலாவது உலகிண்ணத்தை பெற்றுக்கொடுக்கவேண்டிய சுமையை அவர் மேல் சுமத்தியுள்ளது.