செய்திகள்

உலககிண்ணப் போட்டிகளில் முதலாவது இரட்டை சதத்தை பெற்றார் கெயில்

மேற்கிந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் கிறிஸ்கெயில் உலககிண்ணப் போட்டிகளில் முதலாவது இரட்டை சதத்தை இன்று சிம்பாப்வேயிற்கு எதிரன போட்டியில் பெற்றுள்ளார்.
இன்று கான்பெராவில் இடம்பெற்ற சிம்பாப்வேயிற்கு எதிரான போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. எனினும் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஸமித் ஓட்டங்கள் எதனையும் பெறாமலே ஆட்டமிழந்தார்.
எனினும் இரண்டாவது விக்கெட்டிற்காக இணைந்த கெயில், சாமூவேல்ஸ் இருவரும்372 ஓட்டங்களை பெற்று ஓரு நாள் போட்டிகளின் அனைத்து இணைப்பாட்ட சாதனைகளை முறியடித்தனர்.
கெயில்ஸ் 147 பந்துகளில் 16 சிக்சர்கள் 10 பவுண்டரிகள் அடங்கலாக 215 ஓட்டங்களை பெற்று இறுதி பந்தில் ஆட்டமிழந்தார்.
சுhமூவேல்ஸ் ஆட்டமிழக்காமல் 156 பந்துகளில் 133 ஓட்டங்களை பெற்றார், மேற்கிந்திய அணி 372 ஓட்டங்களை பெற்றது.
ஒரு நாள் போட்டிகளில் பெறப்பட்ட 5வது இரட்டை சதம் இதுவென்பதுடன் ஐந்து வருடத்திற்கு முன்னர் முதலாவது இரட்டை சதத்தை சச்சின் பெற்ற அதே மார்ச்24 ம்திகதி இந்த இரட்டை சதமும் பெறப்பட்டுள்ளது.
பலர் தன்னிடமிருந்து இரட்டை சதத்தை எதிர்பார்த்ததாகவும், தன்னை அதனை பெறுமாறு தொல்லைகொடுத்துவந்ததாகவும் அவர் ஆட்டமிழந்த பின்னர் குறிப்பிட்டுள்ளார்.