செய்திகள்

உலககிண்ண இந்திய அணி தெரிவு நாளை

உலக கிண்ணப்போட்டியில் விளையாடவுள்ள இந்திய அணியை தெரிவுக்குழுவினர் செவ்வாய்கிழமை தெரிவுசெய்யவுள்ளனர்.
தெரிவுக்குழுவினர் ஏற்கனவே ஓரளவு உலககிண்ண அணிகுழு குறித்து தீர்க்கமான எண்ணத்தை கொண்டு;ள்ள போதிலும் நான்கு வீரர்களுக்கான இடங்கள் இ;ன்னமும் தீர்மானிக்கப்படவேண்டிய நிலையுள்ளன.
உலகிண்ண அணிக்கான 11 வீரர்கள் குறித்து தெரிவுக்குழுவினருக்கு தெளிவான எண்ணம் உள்ளது இன்னமும் இரு துடுப்பாட்ட வீரர்களையும், பந்து வீச்சாளர்களையும் தெரிவுசெய்ய வேண்டிய நிலையில் அவர்கள் உள்ளனர் என சுட்டிக்காட்டப்படுகின்றது.
அம்பதி ராயுடு, ரொபின் ஊத்தப்பா முரளிவிஜய் ஆகிய மூவரில் இருவர் தெரிவுசெய்யப்படலாம்,என தெரிவிக்கப்படுகின்றது.