செய்திகள்

உலகக் கோப்பைக்கான பாகிஸ்தான் அணியின் வீரர்கள் விபரம் வெளியீடு

ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் நடைபெறவிருக்கும் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் பங்கேற்கும் 15 வீரர்கள் கொண்ட பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

வேகப்பந்து வீச்சாளர் உமர் குல் அணியில் சேர்க்கப்படவில்லை. அதே போல் பந்து வீச்சு பரிசோதனையில் உள்ள ஆஃப் ஸ்பின்னர் சயீத் அஜ்மலும் சேர்க்கப்படவில்லை. யூனிஸ் கான் மீண்டும் அணியில் இடம்பெற்றுள்ளார்.

அணி விவரம் வருமாறு:

அகமது ஷேஜாத், மொகமது ஹபீஸ், சர்பராஸ் அகமட், யூனிஸ் கான், ஹாரிஸ் சொஹைல், மிஸ்பா உல் ஹக், உமர் அக்மல், ஷோயப் மக்சூத், அப்ரீடி, யாசிர் ஷா, மொகமது இர்ஃபான், ஜுனைத் கான், ஈஷான் அடில், சொஹைல் கான், வஹாப் ரியாஸ்.