செய்திகள்

உலகப் போரில் வென்ற சர்ச்சில் கூட தேர்தலில் தேல்வியடைந்தவர்தான்: சுப்பிரமணின் சுவாமி

இரண்டாவது உலகப் போரில் இங்கிலாந்துக்கு வெற்றியைத் தேடித்தந்த பிரித்தானிய பிரதமர் சர்ச்சில் கூட தேர்தலில் தோல்வியடைந்தவர் என இந்திய பா.ஜ.க. தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்திருக்கின்றார்.

ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷயின் தோல்வி குறித்து கருத்து வெளியிட்ட போதே பா.ஜ.,க. மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசுவாமி இதனைத் தெரிவித்தார்.

“தோல்வி வரலாற்றுக்கு புதியது இல்ல, 2 வது உலக போரில் இங்கிலாந்துக்கு வெற்றியை தேடி தந்த அப்போதைய பிரிட்டிஷ் பிரதமர் சர்ச்சில் கூட தோல்வி அடைந்தார். மகிந்த ராஜபக்ஷ தோற்றது பெரிய விஷயமல்ல.”

இவ்வாறு தனது டுவிட்டரில் சுவாமி தெரிவித்துள்ளார்.