செய்திகள்

உலகளாவியரீதியில் ஒரு நாளைக்கு 80 மில்லியன் பொலித்தீன் உற்பத்தி, ஆனால் 1 மில்லியன் கூட மீள பயன்படுத்தப்படுவதில்லை

உலகளாவிய ரீதியில் ஒரு நாளைக்கு 80மில்லியன் தொன் பொலீத்தீன் உற்பத்திசெய்யப்படுவதாகவும் அவற்றில் ஒரு மில்லியன் கூட மீள் பயன்பாட்டுக்கு பயன்படுத்தப்படுவதில்லையெனவும் அனைத்தும் சூழலிலேயே வீசப்படுவதாகவும் மட்டக்களப்பு மாவட்ட சூழல் பேணல் திணைக்கள அதிகாரி திருமதி ரஜனி பாஸ்கரன் தெரிவித்தார்.

சூழலுக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் உற்பத்திகளை நிறுத்தி சூழலுக்கு பாதிப்பினை ஏற்படுத்தாது உற்பத்திகளை தூண்டு வகையிலான பயிற்சிகளை மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்ட செயலகமும் மீள்குடியேற்ற,புனர்வாழ்வு அதிகாரசபையும் இணைந்து விதாதா வள நிலையத்துடன் இணைந்து இந்த பணியை முன்னெடுத்துள்ளன.

இதன் ஓரு கட்டமாக சீலை துணிகொண்டு பைகளை உருவாக்கும் பயிற்சி நெறியொன்று இன்று காலை மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் உள்ள விதாதா வள நிலையத்தில் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.தவராஜா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன்,மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனையின் கீழ் மேற்கொள்ளப்பட்டுவரும் சூழல் பாதுகாப்பு பொறிமுறைக்கு இணைவாக இந்த பயிற்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன்கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் பொலித்தீன் பாவனையை தடைசெய்து மாற்று பொருளாக கடதாசி மற்றும் துணி வகைகளில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை அறிமுகம் செய்யும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

இதற்கான நிதி உதவிகளை வழங்க மீள்குடியேற்ற,புனர்வாழ்வு அதிகாரசபை தயாராகவிருப்பதாகவும் இதுபோன்ற பயிற்சி நெறிகள் அனைத்து பகுதிகளிலும் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் தெரிவித்தார்.

IMG_0070