செய்திகள்

உலகின் எதிர்காலம் இந்துசமுத்திரத்தின் அசைவினாலேயே தீர்மானிக்கப்படும்: பாராளுமன்றத்தில் மோடி (காணொளி இணைப்பு)

உலகின் எதிர்காலம் இந்துசமுத்திரத்தின் அசைவினாலேயே தீர்மானிக்கப்படப்போகிறது என்றும் வாய்ப்பின் ஒரு மிகச் சிறந்த தருணத்தில் இலங்கையும் இந்தியாவும் நிற்கின்றன என்றும் இலங்கை பாராளுமன்றத்தில் ஆற்றிய தனதுரையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார்.

இன்று இலங்கை வந்த அவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ஆகியோரை சந்தித்தபின்னர் பாராளுமன்றத்தில் உரை ஆற்றியபோதே இவ்வாறு தெரிவித்தார்.

முன்னே இருக்கின்ற பாதையானது இலங்கை மேற்கொள்ளவிருக்கும் தெரிவினைப் பொறுத்தது என்று தனதுரையில் குறிப்பட்ட மோடி இலங்கையின் ஒருமைப்பாடும் சுயாதிபத்தியமும் இந்தியாவுக்கு முக்கியமானது என்பதை என்னால் உறுதிப்படுத்த முடியும் என்றும் கூறினார்.

அவர் அங்கு மேலும் பேசுகையில்,

இந்தப் பாராளுமன்றம் ஆசியாவின் மிகப்பழைய ஜனநாயகங்களில் ஒன்றை பிரதிநித்திதுவப்படுத்துகிறது. நான் இங்கு 1.25 பில்லியன் நண்பர்களினதும் பல மில்லியன் கணக்கான இலங்கை கிரிக்கட் ரசிகர்களினதும் வாழ்த்துக்களை கொண்டுவந்திருக்கிறேன்.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் ஒரு நிலா எல்லை இல்லை ஆனால் எல்லா வித்திதிலுமே நாம் நெருங்கிய அயலவர்கள். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான தொடர்பின் பலம் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் மகிந்தர் இலங்கைக்கு வருகை தந்ததில் இருந்து புலப்படுகிறது.

நாங்கள் வன்முறையை சந்தித்திருக்கிறோம். பயங்கரவாதத்தை சந்தித்திருக்கிறோம். அமைதி முறையிலான தீர்வுகளையும் கண்டிருக்கிறோம். எமக்கே உரிய வழிகளில் அவற்றை கையாண்டிருக்கிறோம்.

எல்லா சமூகங்களினதும் அபிலாஷைகளையும் பூர்த்தி செய்யும்போது ஒவ்வொரு தனி நபர்களினதும் பலத்தை நாடுகள் பெறுகின்றன.

இலங்கை தசாப்தகால முரண்பாடுகள் மற்றும் வன்முறைகளில் இருந்து மீண்டிருக்கிறது. நீங்கள் பயங்கரவாதிகளை தோற்கடித்திருக்கிறீர்கள்.

அண்மைய காலங்களில் நீங்கள் எடுத்திருக்கும் நிலைப்பாடுகள் துணிச்சலானவை ஆச்சரியம் அளிப்பவை. புதிய ஒரு காலத்தின் அறிகுறிகள் அவை.

முன்னே இருக்கின்ற பாதையானது இலங்கை மேற்கொள்ளவிருக்கும் தெரிவினைப் பொறுத்தது.

இலங்கையின் ஒருமைப்பாடும் சுயாதிபத்தியமும் இந்தியாவுக்கு முக்கியமானது என்பதை என்னால் உறுதிப்படுத்த முடியும்.

நான் கனவு காணும் அயல்நாட்டில், வர்த்தகம், எண்ணக்கருக்கள், முதலீடு தொழில்நுட்பம் மற்றும் மக்கள் எல்லைகளுக்கிடையில் இலகுவாக பரிமாறப்படவேண்டும் என்பதாகும்.

தரை மற்றும் கடல் ஆகியவற்றை இணைப்பதன் மூலம் இரு நாடுகளும் செழிப்பின் இயந்திரங்களாக வரமுடியும் என்று நம்புகிறேன்.

பாரியளவில் காணப்படும் சமுத்திர பொருளாதாரத்தையும் நாம் பயன்படுத்திக் கொள்வோம்.

கடந்த மாதம் அமைதியான வழிகளில் அணுசக்தியை பயன்படுத்திக் கொள்ளும்பொருட்டு உடன்படிக்கை ஒன்றை செய்தோம்.

தெற்காசியாவுக்கான இந்தியாவின் செய்மதி விரைவில் விண்வெளியில் இருக்கும். இதனை இலங்கை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

எமது உறவின் இதயங்களில் மக்கள் இருக்கிறார்கள்.

நாம் இருவரும் ஒன்றுசேர்ந்து எமது பெளத்த மற்றும் இராமாயண பண்புகளை மேம்படுத்துவோம்.

எமது கடல் சார் அயல் உறவில் எம் இருவரதும் கூட்டுப்பொறுப்பு தெளிவானது.

எமது அண்மைய வரலாறு எதனை கூறுகிறது என்றால் நம் இருவரும் ஒன்றாக கஷ்டப்பட்டு பின்னர் ஒன்றாக வேலைசெய் யும்போது வினைத்திறனுடன் இருந்திருக்கிறோம்.

பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதத்தை முறியடிப்பதில் எமக்கிடையிலான ஒத்துழைப்பு அவசியமானது. எம் இருவருக்குமே உள்ளக அச்சுறுத்தல் இருக்கிறது. பாதுகாப்பு விடயத்தில் நாம் ஒத்துழைப்பது இன்றுபோல் என்றும் வலிமையானதாக இருந்ததில்லை.

உலகின் எதிர்காலம் இந்துசமுத்திரத்தின் அசைவினாலேயே தீர்மானிக்கப்படப்போகிறது.

வாய்ப்பின் ஒரு மிகச் சிறந்த தருணத்தில் இலங்கையும் இந்தியாவும் நிற்கின்றன.என்று கூறினார்.

[youtube url=”https://www.youtube.com/watch?v=t28ojZvzR0M” width=”500″ height=”300″]