செய்திகள்

உலகின் தலைசிறந்த கிரிக்கெட் வீரராக சங்காவை மீண்டும் தெரிவுசெய்தது விஸ்டன்

உலகின் தலைசிறந்த கிரிக்கெட் வீரராக இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரரும், விக்கெட் காப்பாளருமான குமார் சங்ககாரவை விஸ்டன் சஞ்சிகை இரண்டாவது தடவையாக தெரிவுசெய்துள்ளது.
2011 இல் ஏற்கனவே அவரை விஸ்டன் தெரிவுசெய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஓவ்வொரு கிரிக்கெட் வீரரும் தான் ஓய்வுபெறுவதற்கு முன்னர் சாதிக்க வேண்டிய பட்டியலொன்றை வைத்திருப்பார்கள்.
குமார்சங்ககாரவிடம் அவ்வாறன பட்டியலொன்று இருந்திருந்தால் அதிலுள்ள பெரும்பாலான விடயங்களை அவர் 2014 இல் நிறைவேற்றினார்.
அதில் மிகமுக்கியமாக இலங்கை அணிக்காக உலகின் முக்கிய போட்டித்தொடர் ஓன்றை வென்று கொடுப்பது காணப்பட்டிருக்கும்,இருபதிற்கு இருபது உலககிண்ணத்தின் இறுதிபோட்டியில் ஆட்டமிழக்காமல் 52 ஓட்டங்களை பெற்று அந்த நோக்கத்தையும் அவர் பூர்த்தி செய்தார்.
கடந்த வருடம் அவர் முச்சதமமொன்றை பெற்றார்,லோட்சில் தனது முதலாவது டெஸ்ட் சதத்தை பெற்றார்,தன்னால் இங்கிலாந்தின் மைதானங்களிலும் சிறப்பாக ஆட முடியுமென நிருபித்தார்.இலங்கை அணி போட்டித்தொடரை வெல்வதற்கு உதவினார்

சங்ககார கிரிக்கெட் உலகின் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக ஏற்றுக்கொள்ளப்பட்ட வருடமாக இது அமைந்தது.கடந்த பல வருடங்களாக அவர் தனக்கு அந்த தகுதியுள்ளது என்பதை நீரூபித்து வந்தார்.
எனினும் 2014 ம் ஆண்டே அவரது மிகச்சிறந்த வருடம்-2868ஓட்டங்களை பெற்றார்.இதன் மூலம் ரிக்கி பொன்டிங்கின் சாதனையை முறியடித்தார்.இதில் 971 ஓட்டங்கள் இங்கிலாந்திற்கு எதிராக பெறப்பட்டன, இங்கிலாந்து வீரர்கள் அவரை பார்த்தாலே தடுமாறினர் என விஸ்டன் தெரிவித்துள்ளது
ஓரு நாள் போட்டியென்பது இளம் வீரர்களுக்கானது என்ற கருத்தை அவர் மாற்றினார்,அவர் இருபதிற்கு இருபது போட்டியையும் சிறப்பாக விiளாட பழகியுள்ளார்,என சுட்டிக்காட்டியுள்ளது.