செய்திகள்

உலகின் மிகப்பெரிய அசையும் சொத்தான EVER GREEN − EVER ACE கொள்கலன் கப்பல் இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்து

உலகின் மிகப்பெரிய கொள்கலன் கப்பலான எவர் ஏஸ் (EVER ACE) தனது பயண வழியில் இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது என இலங்கை துறைமுக அதிகார சபை தெரிவித்துள்ளது.இந்த கப்பல் உலகின் முன்னணி கொள்கலன் கப்பல் நிறுவனங்களில் ஒன்றான எவர்கிரீனுக்கு சொந்தமானதென தெரிவிக்கப்படுகிறது.400 மீற்றர் நீளமும் 62 மீற்றர் அகலமும் உள்ள இந்த மிதக்கும் தீவு 23,992 கொள்கலன்களை சுமந்து செல்லக்கூடியது.

நெதர்லாந்து ரொட்டர்டாம் துறைமுகத்திலிருந்து சுயெஸ் கால்வாயூடாக வந்து கொழும்பு துறைமுகத்தை அடைந்துள்ளது.உலகின் 24 துறைமுகங்கள் மட்டுமே இந்தக் கப்பலை கையாள முடியும். அதில் தெற்காசிய வலயத்தில் கொழும்பு துறைமுகத்தில் மட்டுமே இந்தளவு பிரமாண்டமான கப்பலை அனுமதிக்கும் ஆழமும் கொள்ளளவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.(15)