செய்திகள்

உலக கல்வி மாநாட்டில் கலந்துக் கொள்ள கல்வி இராஜாங்க அமைச்சர் வொஷிங்டன் பயணம்

உலக “முதலில் மக்கள்” அமைப்பின் ஏற்பாட்டில் வொஷிங்டனில் நடைபெற இருக்கும் உலக கல்வி மாநாட்டில் கலந்துக் கொள்ள கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் பயணமாக உள்ளார்.

இந்த மாநாட்டுக்கான அழைப்பிதழ் அமைச்சருக்கு வழங்கபபட்டது. இதற்கு மேற்படி அமைப்பின் நிர்வாக இயக்குனர் ரவீந்திரகுமார், பணிப்பாளர் சார்ல்ஸ் ரவீந்திரன் ஆகியோர் இலங்கைக்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடதக்கது. இதன் படி அமைச்சர் அவர்கள் ஜூலை 11 வொஷிங்டன் பயனமாவார்.

இந்த மாநாட்டுக்கு செல்லும் கல்வி இராஜாங்க அமைச்சர் இலங்கையின் கல்வி அபிவிருத்தி தொடர்பான விடயங்களை முன்வைப்பதுடன் மேலும் அபிவிருத்தி செய்ய உலக கல்வி அமைப்புகள், கல்வியாளர்கள் மற்றும் கல்வியில் முன்னிற்கும் நாடுகளின் ஒத்துழைப்புக்களை பெறுவது தொடர்பான விடயங்களை பேச உள்ளமை குறிப்பிடத்தக்கது.