உலக வர்த்தக மையத்தின் உச்சியிலிலுருந்து பரசூட் மூலம் குதித்த வௌிநாட்டவர் காயம்
கொழும்பு உலக வர்த்தக மையத்தின் உச்சியிலிலுருந்து பரசூட் மூலமாக கீழே இறங்குவதற்கு முயற்சித்த வேளை வௌிநாட்டு பிரஜையொருவர் விபத்துக்குள்ளாகியுள்ளார்.
பரசூட் உரியவாறு செயற்படாமல் இன்று அதிகாலை மரமொன்றுடன் மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பொலிஸார் மற்றும் தீயணைப்பு படையினரால் குறித்த அவுஸ்திரேலிய பிரஜை காயங்களுடன் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.