செய்திகள்

உலக வர்த்தக மையத்திலிருந்து பரசூட்டில் குதித்தவர் கீழே விழுந்து காயம்

கொழும்பில் உலக வர்த்தக மைய கட்டிடத்தின் மேலிருந்து பரசூட் மூலம் கீழே குதித்த ஒருவர் கீழே விழுந்து படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் வகையில் நேற்று முன்தினம் முதல் கொழும்பு உலக வர்த்தக மையப்பகுதியில் பரசூட் வீரர்களின் கண்காட்சி இடம்பெற்று வந்த நிலையில் நேற்று மாலை அவ்வாறாக கண்காட்சியில் கலந்துக்கொண்டிருந்த 47 வயதுடைய அவுஸ்திரேலியர் ஒருவரே இவ்வாறு கீழே விழுந்து காயமடைந்துள்ளார்.

இவர் பரசூட் மூலம் மேலிருந்து குதித்த போது இடைவழியில் பரிசூட் செயலிழந்ததால் அவர் ஹில்டன் ஹோட்டலுக்கு அருகிலுள்ள வாகன தரிப்பிடப் பகுதியில் விழுந்து காயமடைந்துள்ளார். இதனை தொடர்ந்து அவர் உடனடியாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

N5