செய்திகள்

உள்ளக பொறிமுறை தொடர்பில் ஆராயப்படுகின்றது: பதில் வெளிவிவகார அமைச்சர்

போர்க் குற்­றச்­சாட்­டுக்கள் குறித்து உள்­ளக விசா­ர­ணையை எவ்­வாறு நடத்­து­வது என்று நிபு­ணர்கள் ஆராய்ந்­து­வ­ரு­கின்­றனர். எமக்கு வழங்­கப்­பட்­டுள்ள காலப்­ப­கு­திக்குள் உள்­ளக பொறி­முறை செயற்­பாட்டை முன்­னெ­டுப்போம் என்று பதில் வெளி­வி­வ­கார அமைச்சர் அஜித் பி. பெரேரா தெரி­வித்தார்.

வெளி­வி­வ­கார அமைச்சில் நேற்று நடை­பெற்ற விசேட செய்­தி­யாளர் மாநாட்டில் ஊட­க­வி­ய­லா­ளர்கள் எழுப்­பிய கேள்­விக்கு பதி­ல­ளிக்­கை­யி­லேயே அவர் இதனை தெரி­வித்தார். அவர் அங்கு மேலும் குறிப்­பி­டு­கையில் தெரிவித்ததாவமு:

“யுத்­தத்தின் இறுதிக் கட்­டத்தில் மனித உரிமை மீறல்கள் இடம்­பெற்­ற­தாக குற்­றச்­சாட்­டுக்கள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன. இந்­நி­லையில் இது தொடர்­பான பொறுப்­புக்­கூ­ற­லா­னது உள்­ளக சட்­டத்­துக்கு அமைய உள்­ளக நீதி­ப­தி­க­ளைக்­கொண்டே நிலை­நாட்­டப்­படும்.

அதா­வது உள்­நாட்டு சட்­டத்­தின்­ப­டியும் எமது நீதி­ப­தி­க­ளைக்­கொண்டும் உள்­ளக பொறி­மு­றைக்கு அமை­வா­கவும் உள்­ளக பொறி­மு­றையை நிறுவ இருக்­கின்றோம். இந்த செயற்­பாட்டை எவ்­வாறு முன்­னெ­டுப்­பது என்­பது தொடர்பில் நிபு­ணர்கள் தற்­போது ஆராய்ந்­து­வ­ரு­கின்­றனர். அந்­த­வ­கையில் எமக்கு வழங்­கப்­பட்­டுள்ள காலப்­ப­கு­திக்குள் இந்த செயற்­பாட்டை முன்­னெ­டுப்போம்” என்றார்.

யுத்தக் குற்­றச்­சாட்­டுக்­க­ளுக்கு உள்­ளக பொறி­மு­றையின் கீழ் பொறுப்­புக்­கூ­று­வ­தாக இலங்கை அர­சாங்கம் வழங்­கிய உறு­தி­மொ­ழியை அடுத்து ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேரவை இலங்கை குறித்த அறிக்­கையை ஆறு மாதங்­க­ளுக்கு பிற்­போட்­டது.

ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வைக்கு ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேர­வையின் ஆணை­யாளர் சயிட் அல் ஹுசெய்ன் செய்த பரிந்­து­ரைக்கு அமைய இந்த நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டது.

ஆனால் ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் இலங்கை குறித்த விசா­ரணை அறிக்கை எதிர்­வரும் செப்­டம்பர் மாதத்தில் நிச்­ச­ய­மாக வெளி­யி­டப்­படும் என ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேர­வையின் ஆணை­யாளர் சயிட் அல் ஹுசெய்ன் தெரி­வித்­துள்ளார்.

விசா­ரணை அறிக்கை வெளி­யி­டப்­ப­டு­வ­தனை தடுக்க புதிய முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்­டாலும் செப்­டம்பர் மாதத்தில் அறிக்கை சமர்ப்­பிக்­கப்­ப­டு­வ­தனை தடுத்து நிறுத்த முடி­யாது என அவர் உறு­தி­ய­ளித்­துள்ளார்.