செய்திகள்

உள்ளக விசாரணைக்கான பொறிமுறையை உருவாக்கும் வகையில் உயர்மட்ட பேச்சு

உள்ளக விசாரணைக்கான பொறிமுறையை உருவாக்கும் வகையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் உயர் மட்ட பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மஹேஷினி கொலன்னே நேற்று தெரிவித்தார்.

இதேவேளை, இதன் பொறிமுறையை மேலும் வலுப்படுத்தும் வகையில் அனைத்து பங்குதாரர்களுடனும் கட்டம், கட்டமான பேச்சுவார்த்தைகளை நடத்த வெளிவிவகார அமைச்சு தீர்மானித்திருப்பதாகவும் அவர் கூறினார்.

ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 29வது அமர்வு நேற்று ஆரம்பமானது. இதன்போது ஆரம்ப அமர்வில் உரை யாற்றிய மனித உரிமைகள் ஆணை யாளர் இலங்கையின் மனித உரிமைகள் விவகாரம் குறித்து உரையாற்றியதுடன் செப்டம்பருக்கு முன்னதாக உள்ளக விசாரணைக்கான பொறிமுறையை உருவாக்க அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத் தியிருந்தார்.

அவரது கருத்துக்களை வெளிவிவகார அமைச்சு உள்வாங்கியுள்ளதாக சுட்டிக் காட்டிய பேச்சாளர் அதற்கமைய கட்டம் கட்டமாக செயற்பாடுகள் குறித்து கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை, செய்தியாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கையில், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நாயகத் தினை இலங்கைக்கு வரவழைத் துள்ளமை மற்றும் காணாமற் போன வர்களை கண்டறிவது தொடர்பில் செயலாற்றுவதற் கென ஐ.நா.விலிருந்து விசேட குழுவொன்று ஓகஸ்ட் மாதம் இலங்கை வரவுள்ளமை என்பன உள்ளக பொறிமுறைக்கான முன்னோடிச் செயற்பாடுகளேயாகு மெனவும் அவர் கூறினார்.