செய்திகள்

உள்ளக விசாரணை சர்வதேசத்தின் மேற்பார்வையிலேயே இடம்பெற வேண்டும்: சுமந்திரன்

சர்­வ­தேச மனிதஉரி­மைகள் பேர­வை­யிடம் இணங்­கிக்­கொண்­டதன் பிர­காரம் உள்­ளக விசா­ரணை ஒன்று இடம்­பெ­று­மானால் அது சர்­வ­தே­சத்தின் மேற்­பார்­வையின் கீழேயே மேற்­கொள்­ளப்­பட வேண்டும். அதற்கான பொ­றி­முறை ஒன்று உரு­வாக்­கப்­பட வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.ஏ.சுமந்­திரன் பாரா­ளு­மன்­றத்தில் அர­சாங்­கத்தை வலி­யு­றுத்­தினார்.

காணாமல் போனோரைக் கண்­ட­றி­வ­தற்­காக எனும் பெயரில் நிய­மிக்­கப்­பட்­ட­தான மெக்ஸ்வெல் பர­ன­கம தலை­மை­யி­லான ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் மீதோ அல்­லது அவ்­வா­ணைக்­கு­ழு­வுக்கு ஆலோ­ச­னை­களை வழங்­கு­வ­தற்­கென நிய­மிக்­கப்­பட்ட டெஸ்மென் பெரேரா மீதோ எமக்கு நம்­பிக்கை கிடை­யாது. அதனை கண்­து­டைப்­பா­கவே பார்க்­கிறோம்.

எனவே புதிய அர­சாங்கம் உள்­ளக விசா­ர­ணை­களை உண்மைத் தன்மை வாய்ந்­த­தாக மேற்­கொள்­ளத்­த­வ­றினால் முன்­னைய அர­சாங்­கத்­திற்கு நிகழ்ந்­ததே நிகழும் என்று கூறினார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை முன்­வைக்­க­பட்ட குற்­ற­வியல் நட­வ­டிக்கை முறைச்­சட்­டக்­கோவை (விஷேட ஏற்­பா­டுகள்) சட்­டத்தின் கீழான கட்­ட­ளை­களை நிறை­வேற்றிக் கொள்­வ­தற்­கான விவா­கத்தில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். சுமத்­திரன் எம்.பி இங்கு மேலும் கூறு­கையில்,

காணா­மல்­போனோர் தொடர்பில் தேடி­ய­லையும் உற­வுகள் வேறு எத­னையும் கேட்­க­வில்லை. மாறாக தமது உற­வு­களை மீட்­டுத்­த­ரு­மாறே மன்­றா­டு­கின்­றனர். இது தொடர்பில் ஆணைக்­குழு ஒன்றும் அமைக்­கப்­பட்­டது.

காணாமல் போனோரை கண்­ட­றி­வ­தற்­கென மெக்ஸ்வெல் பர­ன­கம என்­ப­வரின் தலை­மையில் ஜனா­தி­பதி ஆணைக்­குழு ஒன்று நிறு­வப்­பட்­டது. இவ்­வா­ணைக்­கு­ழு­வா­னது வெறும் கண்­து­டைப்­புக்­காக நிறு­வப்­பட்­டது என்றே கரு­து­கின்றோம். அது­மாத்­தி­ர­மின்றி மேற்­படி ஆணைக்­கு­ழுவின் நட­வ­டிக்­கை­களில் நாம் நம்­பிக்கை கொள்ள முடி­யா­துள்ளோம். மேலும் இவ்­வா­ணைக்­கு­ழு­வுக்கு ஆலோ­சணை வழங்­கு­வ­தற்­கென நிய­மிக்­கப்­பட்ட சட்ட ஆலோ­ச­க­ரான டெஸ்மன் பெரேரா மீதும் எமக்கு நம்­பிக்கை கிடை­யாது.

காணாமல் போனோரை கண்­ட­றியும் வகையில் நிய­மிக்­கப்­பட்­ட­தான இவ்­வா­ணைக்­குழு முறை­யான உண்­மைத்­தன்­மை­யு­ட­னான விசா­ர­ணை­களை மேற்­கொண்­டி­ருக்­க­வில்லை. பாது­காப்­புத்­த­ரப்­பி­னரே தமது பிள்­ளை­களை உற­வு­களை கொண்டு போயி­ருப்­ப­தாக சாட்­சியம் வழங்­கி­யுள்­ளனர் என்­ப­தையும் சுட்­டிக்­காட்ட விரும்­பு­கின்றேன்.

நிலைமை இப்­ப­டி­யி­ருக்க இலங்கை மீதான விசா­ரணை விடயம் தொடர்பில் சர்­வ­தேச மனித உரி­மைகள் பேர­வை­யுடன் இணக்கம் ஒன்றை ஏற்­ப­டுத்திக் கொண்ட புதிய அர­சாங்கம் உள்­ளக விசா­ர­ணைக்கும் ஏற்­றுக்­கொண்­டுள்­ளது.

உள்­ளக விசா­ரணை ஒன்று மேற்­கொள்­ளப்­ப­டு­மே­யானால் அது சர்­வ­தே­சத்தின் மேற்­பார்­வை­யுடன் மேற்­கொள்­ளப்­ப­ட­வேண்டும். அதற்­கான பொறி­முறை ஒன்று இங்கு உரு­வாக்­கப்­ப­டு­வது அவ­சியம் என்­ப­துடன் சர்­வ­தேச பிர­மு­கர்­களை அனு­ம­திக்கும் நிலையும் உருவாக்கப்படுதல் அவசியமாகும்.

உள்ளக விசாரணை விடயத்தில் உண்மைத்தன்மை பேணப்படுவதன் மூலமே இந்நாட்டின் மீதான அழுத்தங்களில் இருந்தும் விடுதலையாக முடியும். மேலும் உண்மைத்தன்மையற்ற விதத்தில் செயற்பட முயற்சித்தால் முன்னைய அரசாங்கத்துக்கு ஏற்பட்ட நிலையே இன்றைய அரசுக்கும் ஏற்படும் எனினும் நாம் அதை விரும்பவில்லை என்றார்.