உள்ளக விசாரணை பற்றி கருத்துக்கூற விஜயதாசவுக்கு உரிமையில்லை: ராஜித சொல்கிறார்
யுத்தக் குற்றச்சாட்டு குறித்த உள்ளக விசாரணைகள் தொடர்பில் கருத்து வெளியிடுவதற்கு நீதியமைச்சர் விஜேதாச ராஜபக் ஷவுக்கு எந்த உரிமையும் இல்லை என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித்த சேனாரட்ன தெரிவித்தார். வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுக்கே இது தொடர்பில் கருத்து வெளியிடும் உரிமை உள்ளது என்றும் குறிப்பிட்டார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநா ட்டில் கலந்துகொண்ட அமைச்சரிடம் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறி னார்.
யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அரசாங்கம் விசாரணை நடத்தாது என்று நீதியமைச்சர் விஜேதாச ராஜபக் ஷ கூறியு ள்ளமை தொடர்பில் உங்கள் கருத்து என்னவென்று கேள்வி எழுப்பப்பட்டது. இதறற்குப் பதிலளித்த அமைச்சர் ராஜித இதனைத் தெரிவித்தார்.