செய்திகள்

உள்ளுராட்சிமன்றங்களின் பதவிக்காலம் நீடிக்கப்படும்: அரசாங்கம் அறிவிப்பு

உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் பத­விக்­காலம் நாளை 31ஆம் திகதியுடன் நிறை­வ­டை­ய­வுள்ள நிலையில், அதன் பத­விக் ­கா­லத்தை மே மாதம் வரை நீடிப்­ப­தற்கு அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்ளது.

பதவிக் காலம் நிறைவுக்கு வரும் உள்ளூ­ராட்சி மன்­றங்­களின் காலத்தை மே மாதம் 15 ஆம் திகதி வரை நீடிப்­ப­தற்­கான அரச வர்த்­த­மானி அறிவித்தலில் உள்­நாட்டு அலு­வல்கள், உள்ளூ­ராட்சி, புத்­த­சா­சன அமைச்சர் கரு ஜெய­சூ­ரிய கையொப்­ப­மிட்­டி­ருப்­ப­தாக தெரி­ய ­வ­ரு­கி­றது.

இது தொடர்பில் உள்­ள­ூராட்சி மற்றும் புத்­த­சா­சன அமைச்சின் செய­லாளர் ஜே.தட ல்­லகே கருத்துத் தெரி­விக்கையில்,

நாட்டின் 234 உள்­ளூ­ராட்சி மன்­றங்­களில் பெரும்­பா­லா­ன­வற்றின் பத­விக்­காலம் மார்ச் 31 ஆம் திக­தி­யான நாளை­ய தினத்துடன் நிறை­வ­டை­ய­வுள்­ளது. எனினும், தற்­போ­தைய நிலையில் உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்­தலை நடத்­து­வ­தற்­கான எந்­த­வொரு ஏற்­பா­டு­களும் தற்­போது அர­சாங்­கத்­திடம் இல்லை.

மேலும் உள்­ளூராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்­தலை தொகு­தி­வாரி முறை­மையின் கீழ் நடத்­து­வ­தற்கான் ஏற்­பா­டு­களே முன்­னைய ஆட்­சியின் போது எடுக்­கப்­பட்­டி­ருந் தது.

எனினும் இது குறித்து தொகு­தி­க­ளுக்­கி­டை­யி­லான எல்லை நிர்­ணய ஏற்­பா­டுகள் இது­வரை பூர்த்தி செய்­யப்­ப­ட­வில்லை. எல்லை நிர்­ணய ஏற்­பா­டு­க­ளுக்கு மேல­திக காலம் தேவைப்­ப­டு­கின்ற பிர­தான கார­ணத்தை அடிப்­ப­டை­யாக கொண்டே உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் பத­விக்­காலம் நீடிக்­கப்­பட்­டுள்­ளது.

இதற்கு எதிர்­மா­றாக ஏப்­ரலின் பிற்­பாடு பாரா­ளு­மன்ற தேர்­தலை நடத்­து­வ­தற்­கான வாய்ப்­புகள் அதி­க­ளவில் தென்­ப­டு­வதன் கார­ணத்தை கருத்திற் கொண்டும் உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் காலம் நீடிக்­கப்­பட்­டுள்­ளது.

இதற்­க­மைய இது தொடர்­பி­லான வர்த்­த­மானி அறிவித்தலில் அர­சாங்கம் விரைவில் வெளியி­ட­வுள்­ளது. மேற்­படி உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் காலத்தை நீடிப்­ப­தற்­கான அரச வர்த்­த­மானி அறிவித்தலில் அமைச்சர் கரு ஜெய­சூ­ரிய கையொப்­ப­மிட்­டுள்ளார்.

மேற்­கு­றித்த வர்த்­த­மானி அறிவித்தலின் பிர­காரம் 201 பிர­தேச சபைகள், 30 நகர சபைகள் மற்றும் 3 மாந­கர சபை­களின் பத­விக்­காலம் நீடிக்கப்படவுள்ளது. இதன்படி பெரும்பாலான உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் மே மாதம் 15 ஆம் திகதி வரையும், 65 உள்ளூராட்சி மன்றங்கள் ஜூலை மாதம் 31 ஆம் திகதி வரையும் 21 மன்றங்கள் ஒக்டோபர் மாதம் 16 ஆம் திகதி வரையும் நீடிக்கப்பட்டுள் ளன.